ம.பி. சபாநாயகர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.. பாஜக மனு
டெல்லி: மத்திய பிரதேச சட்டசபை வரும் 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டள்ளது. ஆளுநர் லால்ஜி உரைக்கு பின்னர் சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்தார். கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக சபையை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார் ,ஆனால் அதேநேரம் எதிர்க்கட்சியான பாஜக, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 பேருடன் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதன்பிறகு 6 அமைச்சர்கள் உள்பட 22 பேரும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கமல்நாத் 6 அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், பாஜக பிடியில் உள்ள எம்எல்ஏக்களை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். இதையடுத்து முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். வாக்குகள் அடிப்படையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வீடியோ எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தாமதிக்கவோ நிறுத்திவைக்கவோ கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபை இன்று காலை கூடிய நிலையில் ஆளுநர் லால்ஜி உரையாற்றினார். இதையடுத்து கொரோனா வைரஸ் பிரச்சனையை கூறி சட்டசபையை சபாநாயகர் என்பி பிரஜபதி வரும் 26ம் தேதி வரை ஒத்திவைத்தார். இதனால் இன்னும் 10 நாட்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகர் என்பி பிரஜபதிக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது.மத்தியப் பிரதேச சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுமாறு பாஜக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் கமல்நாத்தை இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரிய ஆளுநரின் உத்தரவை காங்கிரஸ் அரசாங்கம் "வேண்டுமென்றே" மீறுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது, மேலும் ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க காங்கிரஸ்க்கு உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் குதிரை பேரத்தில் ஈடுபட முயற்சிக்கிறது என்றும் பாஜக குற்றம்சாட்டி உள்ளது.ஆளுநர் லால்ஜி டாண்டனை, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள் 106 பேர் இதில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications