தேர்தல் பிரசாரங்கள் ரத்து! - லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மும்பை விரையும் பிரதமர் மோடி
டெல்லி: பிரதமர் மோடி தன்னுடைய தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்துவிட்டு, பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்த இன்று மும்பை செல்கிறார்.
Recommended Video
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஒரு மாதமாக பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை லதா மங்கேஷ்கர் காலமானார்.
இசைக்குயில் மறைவு லதா மங்கேஷ்கரின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லதா மங்கேஷ்கரின் இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி தமது ட்விட்டர் பதிவில், லதா மங்கேஷ்கர் திரைத்துறைக்கு அப்பால் தேசத்தின் மீதும் பற்று கொண்டிருந்தார். வலிமையான பாரதத்தை காண விரும்பியவர் லதா திதி. அவரிடமிருந்து ஏராளமான அன்பைப் பெற்றிருக்கிறேன். அடுத்தடுத்த தலைமுறைகளால் எப்போதும் நினைவு கொள்ளத்தக்கவராக லதா மங்கேஷ்கர் திகழ்வார். யாராலும் நிரப்பவே முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார் லதா மங்கேஷ்கர் என பதிவிட்டுள்ளார்.

பிரசாரம் தள்ளிவைப்பு
லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு மத்திய அரசு 2 நாள் துக்க தினமாக கடைபிடிக்கப்படும்; தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த பாஜக தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாஜக
உத்தரப்பிரதேச பாஜக அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள், லதா மங்கேஷ்கர் ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள். உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா தேர்தலுக்கான இன்று அங்கு நடைபெறவிருந்த அனைத்து தேர்தல் பிரசாரங்களும் கூட்டங்களும் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

பிரதமர் பயணம்
கோவா சட்டசபைத் தேர்தலுக்காக காணொலி மூலம் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கோவா மாநிலத்தின் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடுவதையும் தள்ளிவைத்துள்ளனர். இதையடுத்து, மும்பையில் இன்று மாலை நடைபெறவுள்ள லதா மங்கேஷ்வர் இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications