எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமார்? புல்ஃபோர்ஸில் அட்டாக் செய்யும் பாஜக!
பீகாரை நிர்வகிக்க தெரியாத நிதிஷ்குமாருக்கு பிரதமர் வேட்பாளர் கனவா? என சாடுகிறது பாஜக.
டெல்லி: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தையே நிர்வகிக்க தெரியாத நிதிஷ்குமாருக்கு எதற்கு பிரதமர் வேட்பாளர் ஆசை என சாடுகிறது பாஜக.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து ஒவ்வொரு எதிர்க்கட்சியும் ஒவ்வொரு வியூகத்துடன் களத்தில் இருக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. ஆகையால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியைத்தான் திமுக ஆதரிக்கக் கூடும். அப்படியான கூட்டணி முன்னிறுத்தும் பிரதமர் வேட்பாளரை திமுக தயக்கமின்றி ஆதரிக்கும்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தம்மை ஒரு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சித்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும் பெறுவதற்கு மமதா தயக்கம் காட்டியது இல்லை. அதேநேரத்தில் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி ஒன்றே போதும்; ஆளும் பாஜகவை வீழ்த்த முடியும் என்பது மமதாவின் நிலைப்பாடாகவும் இருந்து வருகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அல்லது மாநில கட்சிகளின் கூட்டணியை உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்திரசேகர ராவ் சந்தித்தார். அதேநேரத்தில் தம்மையும் ஒரு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என தேசிய கட்சியாக உருமாற்றி இருக்கிறார்.
இந்த பின்னணியில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நிதிஷ்குமாரோ தாம் ஒரு போதும் பிரதமர் வேட்பாளரும் இல்லை; அப்படி ஒரு கனவும் எனக்கு இல்லை என்கிறார். ஆனால் நிதிஷ்குமாரின் பேச்சும் செயல்பாடுகளும் அந்த இலக்கில்தான் அவர் பயணிக்கிறாரா? என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.
பீகாரில் சிபிஐ (எம்எல்) மாநாட்டில் பேசிய நிதிஷ்குமார் வெளிப்படையாகவே காங்கிரஸுக்கு பல அறிவுரைகளை அள்ளி வழங்கினார். ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றி பெற்றுள்ளது. இதன் வேகத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். பழம் பெருமைகளில் காங்கிரஸ் குளிர்காய்ந்து கொண்டிருக்காமல் வியூகங்கள் வகுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியானது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்கினால் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்ட முடியும் என்றார் நிதிஷ்குமார்.

மேலும் பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ வெளியேறியது. அப்போதே பாஜகவுக்கான முடிவுரை பீகாரில் எழுதப்பட்டுள்ளது. அதேபோல்தான் தேசிய அளவிலும் செயல்பட வேண்டும். என்னுடைய அறிவுரைகள் எந்த ஒரு ஆசையின் அடிப்படையிலும் அல்ல. நான் பிரதமர் வேட்பாளரும் அல்ல. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது அவசியமானது. அதனை உருவாக்கத்தான் வேண்டும் என்றார் நிதிஷ்குமார்.
இருந்தபோதும் பிரதமர் வேட்பாளர் கனவில்தான் நிதிஷ்குமார் இப்படி பேசி வருகிறார் என பாஜக தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். மூத்த பாஜக தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், நாடு மோடி தலைமையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நிதிஷ்குமாரோ அல்லது வேறு ஒருவரோ பிரதமர் மோடிக்கு போட்டியாக வரவே முடியாது. நிதிஷ்குமார் ஒரு நம்பகத்தன்மையற்ற அரசியல் தலைவர். அவரால் பீகார் மாநிலத்தையும் கையாளவில்லை. சொந்த கட்சியையும் கையாள முடியவில்லை. தேவகவுடா அல்லது குஜ்ரால் போல உருவாக விரும்புகிறார் நிதிஷ்குமார் என்றார்.
-
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications