இன்னும் முடியல.. கர்நாடக தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! யார் அந்த 10 பேர்?
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. 10 வேட்பாளர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு இருக்கும் நிலையில் இன்னும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
அண்டை மாநிலமான கர்நாடகாவை தற்போது தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அம்மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மே மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே மாதம் 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் ஆட்சியை மீண்டும் தக்க வைப்பதற்காக ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் மட்டும் பல முறை பயணம் சென்று விமான நிலையம், நெடுஞ்சாலை உட்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என கட்சியின் பல தலைவர்கள் கர்நாடகாவில் தங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வெளியிட்டு உள்ளது.
ஆனால், கர்நாடக பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடித்து வந்தது. அக்கட்சியின் தேசிய தலைமை இதில் தீவிர கவனம் செலுத்தி நேரடியாக தலையிட்டு வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டது. கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் கர்நாடக தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த வாரம் செவ்வாய்கிழமை கர்நாடக தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு இருந்தது.

189 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கொண்ட அந்த பட்டியலில் புதிதாக 52 புதிய வேட்பாளர்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியது. அதில் அக்கட்சியினருக்கே திருப்தி ஏற்படாத நிலையில் 23 பேர் கொண்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை புதன்கிழமை பாஜக வெளியிட்டது. 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவிக்காமல் இருந்த நிலையில் இன்று 10 பேர்களை கொண்ட 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டு உள்ளது.
அதில் நேற்று பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கேட்ட ஹுப்லி - தர்வாத் - மத்திய தொகுதியில் மகேஷ் தெண்ணிகை நிறுத்தப்பட்டு உள்ளார். மகாதேவ்புரா, நக்தான், ஹகாரி பொம்மனஹல்லி ஆகிய தனித் தொகுதிகளில் முறையே மஞ்சுலா அரவிந்த் லிம்பவாலி, சஞ்சீவ் அய்ஹோலே, ராமண்ணா ஆகியோர் நிறுத்தப்பட்டு உள்ளார்கள். செதாம் - ராஜ்குமார் பாட்டில், கொப்பால் - மஞ்சுளா அமரேஷ், ரோன் - கலகப்பா பண்டி, ஹெப்பல் கட்டா ஜெகதீஷ், கோவிந்தராஜ் நகர் - உமேஷ் ஷெட்டி, கிருஷ்ணராஜா - ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications