டெல்லி தேர்தல்- முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக! கெஜ்ரிவாலுக்கு எதிராக பர்வேஷ் வர்மா!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. புதுடெல்லி சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜிர்வாலுக்கு எதிராக பர்வேஷ் வர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2013-ம் ஆண்டு முதல் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற தொகுதி புதுடெல்லி.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட டெல்லியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டுகிறது. தலைநகர் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவதை கவுரவமாக கருதுகிறது பாஜக. இதனால்தான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். டெல்லியை பிடித்திருக்கும் பேரழிவு சக்திதான் ஆம் ஆத்மி அரசு எனவும் கடுமையாக விமர்சித்தார் மோடி. மேலும் டெல்லி யூனியன் அரசு நிர்வாகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் இன்று டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மொத்தம் 29 வேட்பாளர்கள், இந்த முதல் கட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பர்வேஷ் வர்மா, புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். கல்காஜி தொகுதியில் முதல்வர் அதிஷியை எதிர்த்து முன்னாள் எம்பி ரமேஷ் பிதூரி களமிறக்கப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட், பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிடுகிறார்.
புதுடெல்லி தொகுதி
அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக போட்டியிடும் புதுடெல்லி சட்டசபை தொகுதி விஐபி தொகுதியாகவே இருந்து வருகிறது. 1993-ம் ஆண்டு பாஜகவின் கீர்த்தி ஆசாத் இத்தொகுதியில் வென்றார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், 1998.2003 -ல் வென்றார். 2008-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் புதுடெல்லி தொகுதி என பெயர் மாற்றப்பட்டது. அதுவரை கோலே மார்க்கெட் தொகுதியாக இருந்தது. 2008 சட்டசபை தேர்தலில் ஷீலா தீட்சித் வென்றார்.
ஆனால் 2013-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ஆம் ஆத்மியின் தலைவரான முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டு வென்றுள்ளார்.
தற்போதைய தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித், பாஜகவின் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா களம் காண்கின்றனர்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications