பாஜக ஓய்வு பெற்றோர் அணியில் அத்வானி, ஜோஷியுடன் மோடி, ராஜ்நாத் சிங்.. காங்கிரஸ் கிளப்பிய சர்ச்சை!
டெல்லி: பாஜகவில் 75 வயதைக் கடந்தவர்கள் இடம் பெறக் கூடிய மார்க்தர்சக் மண்டல்- வழிகாட்டுதல் குழு (முதியோர் குழு) பட்டியலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதை காங்கிரஸ் கட்சி சர்ச்சையாக்கி இருக்கிறது. இதற்கு பாஜக தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு பாஜகவில் மோடி- அமித்ஷா கைகள் ஓங்கிய பின்னர் நிறுவனத் தலைவரான் அத்வானி உள்ளிட்டோர் குறிப்பாக 75 வயதைக் கடந்தவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்; எந்த பதவியில் இருந்தாலும் 75 வயதானால் ராஜினாமா செய்யப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். இவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாஜகவின் வழிகாட்டுதல் குழு எனப்படும் முதியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் அக்கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியுடன் மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோர் பெயர்களும் படங்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்கள் எப்போது சேர்க்கப்பட்டன என்பது அதில் தெரிவிக்கப்படவில்லை.

பாஜகவின் வழிகாட்டுதல் குழுவில் மோடி, ராஜ்நாத் சிங் இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போதே, 2 ஆண்டுகளில் 75 வயதைத் தொடும் மோடி தொடர்ந்து பிரதமராக நீடிப்பாரா? என அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணித் தலைவர்கள் கேள்வி எழுப்பினர் .ஆனால் அமித்ஷா உள்ளிட்டோர் மோடிதான் 5 ஆண்டுகாலமும் பிரதமராகவே நீடிப்பார் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இடம் பெற்றுள்ள வழிகாட்டுதல் குழுவில் மோடியும் ராஜ்நாத்சிங்கும் இடம் பெற்றிருப்பது தொடர்பாக இன்று கேரளா காங்கிரஸ் கட்சி தமது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பதிலளித்துள்ளார். ஷேஜாத் அளித்த பதிலில், 26.8.2014 அன்று பாஜகவின் வழிகாட்டுதல் குழுவில் மொத்தம் 5 பேர் சேர்க்கப்பட்டனர் 1) வாஜ்பாய் 2) மோடி 3) அத்வானி 4) முரளி மனோகர் ஜோஷி 5) ராஜ்நாத் சிங். இது 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிதான் பொய் செய்திகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது என விளாசி இருக்கிறார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications