27ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி-அமெரிக்காவில் இருந்து மோடி திரும்பிய பின் பதவியேற்பு விழா?
டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. டெல்லியில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பெற்றுள்ள பாஜக புதிய முதல்வரை தேர்வு செய்வது மற்றும் பதவியேற்பு விழாவை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணம் முடிந்த பின்னரே டெல்லியின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியது. டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடங்கள் 36. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே பெற்றது. ஆம் ஆத்மியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜகவின் ஆட்சி அமைகிறது. டெல்லியின் புதிய முதல்வர் யார்? என்பது குறித்து பாஜகவில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாஜக முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனும் புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தவருமான பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் புதிய முதல்வர் மற்றும் முதல்வர் பதவியேற்பு விழாவை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணத்தை பிப்ரவரி 13-ந் தேதி நிறைவு செய்கிறார். இதன் பின்னரே பிரம்மாண்டமாக டெல்லியில் பாஜகவின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
டெல்லி பாஜக முதல்வர் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ் (சுஷ்மா ஸ்வராஜ் மகள்) உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிஷி ராஜினாமா
இதனிடையே டெல்லியில் இன்று துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்த முதல்வர் அதிஷி, தமது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்தார். புதிய ஆட்சி அமையும் வரை இடைக்கால முதல்வராக அதிஷி தொடர ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications