Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா! பணக்கார கட்சி பாஜக.. சொத்து மதிப்பை கேட்டா ஆடிப்போவீங்க! அதுவும் ஒரே வருசத்துல இவ்வளவு உயர்வா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் பணக்கார கட்சியாக பாஜக தொடர்வதாக ஏடிஆர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ADR அறிக்கையின்படி, 2021-22ஆம் நிதியாண்டில் பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.6,064 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR), அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், கட்சிகளின் சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

BJP richest party in India with Rs 6,064 crore in ’21-22, a rise of 21 percent as per ADR report

அந்தவகையில், பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது ஜனநாயக சீா்திருத்தத்துக்கான அமைப்பான ஏடிஆர்.

அதன்படி, பாஜக தேசிய கட்சிகளில் மிக அதிக சொத்து மற்றும் கையிருப்பு நிதியை கொண்ட கட்சியாக வளாந்துள்ளது. பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.4,990 கோடியிலிருந்து 2021-22ஆம் ஆண்டில் ரூ.6,046.81 கோடியாக அதிகரித்துள்ளது. இது 21.17 சதவீத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது முந்தைய ஆண்டை விட ரூ.1,050 கோடி சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு 2020-21-இல் ரூ.691.11 கோடியாக இருந்தது. இது தற்போது 16.58 சதவீதம் உயா்ந்து 2021-22-இல் ரூ.805.68 கோடியாக அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.732.79 கோடியிலிருந்து, 2021-22-ஆம் ஆண்டில் 690.71 கோடியாக குறைந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு 151.70 சதவீதம் உயர்ந்துள்ளது. 182.001 கோடி ரூபாயாக இருந்த அக்கட்சியின் சொத்து மதிப்பு 2021 -22ஆம் ஆண்டில் 458.10 கோடியாக அதிகரித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு ரு30.93 கோடியிலிருந்து ரூ.74.54 கோடியாக அதிகரித்துள்ளது.

சிபிஐஎம் சொத்துமதிப்பு ரூ.654 கோடியில் இருந்து ரூ.735.77 கோடியாகவும், சிபிஐயின் சொத்து மதிப்பு 14.05 கோடியிலிருந்து 15.72 கோடியாகவும் உயர்ந்துள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசியக்கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.8,829.16 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2020 21ம் ஆண்டில் ரூ.7,297.62 கோடியாக இருந்தது.

தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பை போல அவற்றின் கடன் அளவு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அதிக கடன்கள் இருப்பது ஏடிஆர் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2020-21-ஆம் ஆண்டில் ரூ.71.58 கோடி கடன் இருந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.16.109 கோடி கடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அதிகபட்சமாக ரூ.6,041.64 கோடி இருப்புத்தொகையை கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி ரூ.763.73 கோடியை இருப்பு வைத்துள்ளது. ஆனால் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் வெளியிட்ட வழிகாட்டுதல்படி, தாங்கள் யாரிடம் இருந்து கடன் பெற்றோம் என்ற விவரத்தை எந்த தேசியக்கட்சியும் வெளியிடவில்லை என ஏடிஆர் குறிப்பிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+