நடிகை குஷ்புவுக்கு திருக்குறள் மூலம் பாஜகவில் சேர தூது விட்ட ஆசீர்வாதம் ஆச்சாரி
டெல்லி: நடிகை குஷ்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கையோடு வாங்க.. வந்து பாஜகவில் சேருங்க.. என்று திருக்குறள் மூலம் தூதுவிட்டிருக்கிறார் அந்த கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு நடிகை குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் நிலவும் கோஷ்டி பூசல்களில் குஷ்புவும் பத்தோடு பதினொன்று என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து தம்மை குறைத்துக் கொண்டவராக வெளிப்படுத்தினார் குஷ்பு. ஆனாலும் இன்னமும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார் குஷ்பு. அண்மையில் கொரோனாவால் எம்.பி. வசந்தகுமார் மரணமடைந்தார்.

குஷ்பு ஆதங்கம்- கோபம்
அவரது படத்திறப்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குஷ்பு அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியை கூட டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என குஷ்பு ஆதங்கப்பட்டிருந்தார். அத்துடன் ஈகோவால் கட்சியை பலவீனப்படுத்தாதீர்கள் என்றும் காட்டம் காட்டியிருந்தார் குஷ்பு.

பாஜகவுக்கு தாவுகிறாரா?
இதனிடையே குஷ்பு பாஜகவுக்கு தாவுகிறார் என அந்த கட்சியின் தரப்பில் தொடர்ந்து செய்தி பரப்பப்படுகிறது. நடிகை குஷ்புவை கட்சிக்குள் இழுப்பதில் பாஜகவில் பெரிய போட்டா போட்டியே நடக்கிறது என்பதை இன்று அந்த கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்ட ட்வீட் ஒன்றும் உறுதி செய்திருக்கிறது.

ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட்
நடிகை குஷ்புவுக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி வாழ்த்து தெரிவித்திருக்கும் ஆசீர்வாதம் ஆச்சாரி, எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி இருக்கிறார். அதாவது இந்த குறளுக்கு மு. வரதராசனார் தரும் விளக்கம் என்னவெனில், தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார் என்பதாகும்.

வாங்க.. யாராலும் ஜெயிக்க முடியாது
நீங்க பாஜகவுக்கு வாங்க.. உங்களை வெல்ல யாரும் இல்லை என்பதை குறிப்பிடும் வகையில்தான் ஆசீர்வாதம் ஆச்சாரி திருக்குறளை மேற்கோள்காட்டியிருக்கிறார். இருந்தபோதும் நடிகை குஷ்புவும் ஆசீர்வாதம் ஆச்சாரியின் கருத்துக்கு நன்றி தெரிவித்து புரியாத புதிரை நீட்டிக்கவே செய்திருக்கிறார். என்னமோ நடக்கிறது!
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications