டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி பதவியேற்பு விழா.. எத்தனை விஐபிகள் வந்தாலும் இவுங்கதான் ஸ்பெஷல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Narendra Modi Oath: நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார்- வீடியோ

    டெல்லி: டெல்லியில் நாளை மோடி பிரதமராக பதவியேற்க உள்ள, நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளின் முக்கிய விஐபிகளும் பங்கேற்க உள்ளனர். ஆனால், கவனம் ஈர்த்துள்ளது என்னவோ, 50 கட்சி தொண்டர்கள்தான்.

    ஏன் அவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் என்று கேள்வி எழலாம். இவர்கள் அனைவருமே, மேற்கு வங்கத்தில் தேர்தல் கலவரத்தில் பலியான பாஜக நிர்வாகிகள் குடும்பங்களை சேர்ந்தவர்களாகும்.

    BJPs special guests for modi swearing in ceremony

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தங்கள் நிர்வாகிகளை கொலை செய்ததாக பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில், உயிர் தியாகம் செய்த 50 பேர் குடும்பங்களை சேர்ந்தவர்களை டெல்லி அழைத்து வந்து மோடி பிரதமராகும் நிகழ்ச்சியில் அமர வைக்கிறது பாஜக தலைமை.

    இதுபற்றி, தேர்தல் கலவரத்தில் கொல்லப்பட்ட மிட்னாப்பூர் பகுதியை சேர்ந்த நிர்வாகியின் மகனான, மனு ஹன்ஸ்டா, கூறுகையில், எனது தந்தை, திரிணாமுல் குண்டர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது எங்களை டெல்லி அழைத்துச் செல்ல உள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது. எங்கள் ஏரியாவில் இப்போது அமைதி நிலவுகிறது என்றார்.

    மிட்னாப்பூர் தொகுதியில், பாஜகவின் திலிப் கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மனாஸ் புனியாவை தோற்கடித்தார் என்பது நினைவு கூரத்தக்கது. மேற்கு வங்கத்தில் இம்முறை வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றுள்ளது.

    42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று அசத்தியுள்ளது. கடந்த முறை 2 தொகுதிகளை மட்டுமே பாஜக வென்றிருந்தது.

    English summary
    BJP has reportedly invited families of all party workers in Bengal who were killed in violence
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X