மே. வங்க முதல்வர் மமதா பானர்ஜி பதவிக்கு நெருக்கடி தரவே உத்தரகாண்ட்டில் பா.ஜ.க நாடகம் அரங்கேற்றம்?
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பதவிக்கு நெருக்கடி தரவே உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் மாற்றம் எனும் நாடகத்தை பாஜக அரங்கேற்றி இருக்கிறதா? என்பது திரிணாமுல் காங்கிரஸின் சந்தேகம்.
உத்தரகாண்ட் முதல்வராக இருந்த தீரத்சிங் ராவத், செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவலை காரணமாக காட்டி இடைத்தேர்தல் உடனே நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் தீரத்சிங் ராவத், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதில் புஷ்கர்சிங் தாமி முதல்வராக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து வரும் இந்த அரசியல் நாடகத்தின் பின்னணி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது.

மமதா தோல்வி
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார் மமதா பானர்ஜி. இந்த தொகுதியில் முதலில் மமதா பானர்ஜி வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து மமதா பானர்ஜி நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்.

மே.வங்க முதல்வராக..
இருப்பினும் எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்றார். நவம்பர் மாதத்துக்குள் மமதா பானர்ஜி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டைப் போலவே கொரொனாவை காரணம் காட்டி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரிக்கவே வாய்ப்பு அதிகம்.

ராஜினாமா செய்ய நெருக்கடி?
இதனால் வேறுவழியே இல்லாமல் மமதா பானர்ஜி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். மமதா பானர்ஜிக்கு இப்படி ஒரு நெருக்கடி கொடுக்கத்தான் உத்தரகாண்ட்டில் அரசியல் நாடகத்தை பாஜக நடத்தி வருகிறது என்பது திரிணாமுல் காங்கிரஸின் குற்றச்சாட்டு.

இடைத்தேர்தலை ஏன் நடத்த கூடாது?
சட்டசபை தேர்தலில் மமதாவை வீழ்த்த முடியாத பாஜக, நெருக்கடியான சூழ்நிலைகளை பயன்படுத்த தொடங்கி இருக்கிறது; கொரோனா பாதிப்பு இருந்த போதே 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன; இடைத்தேர்தல்களை இப்போது நடத்தினால் என்ன? என்பதும் திரிணாமுல் காங்கிரஸின் கேள்வி.

மமதா பானர்ஜி என்ன செய்வார்?
மேலும் பாஜகவின் இந்த கெடுபிடி ஆட்டங்களுக்கு மமதா பானர்ஜி எப்படியான பதில் கொடுப்பார்? என்பதும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. பாஜகவின் நெருக்குதல்களுக்கு பணிந்து மமதா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்வாரா? அல்லது அவரது அடுத்த கட்ட அரசியல் பதிலடி எப்படி இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications