டெல்லியில் மலரும் தாமரை.. எல்லா எக்ஸிட் போல் முடிவுகளும் சொல்வது இதை தான்! அப்போ கெஜ்ரிவால்?
டெல்லி: டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு பாஜக எதிர்க்கட்சியாக இருக்கிறது. கடந்த புதன்கிழமை அங்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜகவே வென்று ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளன. இப்போது இரண்டு புதிய எக்ஸிட்போல் முடிவுகள் வந்துள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் அதிஷி முதல்வராக இருக்கிறார். அதேநேரம் அங்கு எதிர்க்கட்சியாக பாஜக களத்தில் உள்ளன.

டெல்லி தேர்தல்:
ஒரு பக்கம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. மறுபுறம் தலைநகர் டெல்லியில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக போட்டியிடுகிறது. அங்குக் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், பல எக்ஸிட் போல் முடிவுகள் வரிசையாக வெளியாகி வருகிறது. அதன்படி இப்போது இரு எக்ஸிட்போல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.
டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகள்:
டுடேஸ் சாணக்யா அமைப்பு இப்போது புதிய எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெல்லியில் மொத்தம் 70 இடங்கள் உள்ள சூழலில், பாஜக கூட்டணி 51 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ஆம் ஆத்மி 19 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று டுடேஸ் சாணக்யா அமைப்பு கணித்துள்ளது.
இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் பாஜக 46 முதல் 56 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக டுடேஸ் சாணக்கியா தெரிவித்துள்ளது. மறுபுறம் ஆம் ஆத்மி கட்சி 13 முதல் 25 வரையிலான இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 0- 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சிஎன்எக்ஸ் எக்ஸிட் போல்
அதேபோல சிஎன்எக்ஸ் என்ற அமைப்பும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பாஜக 49 முதல் 61 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி 10 முதல் 19 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக சிஎன்எக்ஸ் எக்ஸிட் போல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரஸுக்கு 0 முதல் 1 இடம் கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறாது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எக்ஸிட் போல் சொல்வது என்ன:
டெல்லி தேர்தல் தொடர்பாக இதுவரை வந்த பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜகவே ஆட்சியை அமைக்க வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் கட்சி ஆட்சியைத் தக்கவைக்க முடியாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில், மக்கள் என்ன முடிவெடுத்துள்ளனர் என்பது நாளை தெரிந்துவிடும்.
முன்னதாக ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பும் சர்வே ஒன்றை நடத்தியிருந்தது. அதிலும் கூட அங்கு மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 45-55 இடங்களிலும் ஆம் ஆத்மி 15- 25 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. அதேநேரம் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் சுமார் 33% மக்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளித்துள்ளனர். பாஜகவில் பர்வேஷ் சர்மாவுக்கு 13% பேரும், மனோஜ் திவாரிக்கு 12% பேரும் ஹர்ஷ் வர்தனுக்கு 9% பேரும் ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications