Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட.. ஈகோவால் டெல்லியும் போச்சு! காங்கிரஸால் மண்ணைக் கவ்விய AAP

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளில் வென்று பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்ல வேண்டிய வாக்குகளை காங்கிரஸ் கட்சி பிரித்ததால் மூன்று சதவீத வாக்கு முன்னிலையுடன் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியால் காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், அதற்கு பழி தீர்க்கும் விதமாக டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் தோல்வியை பரிசளித்துள்ளது என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்..

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவும், 8ஆம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

delhi election 2025 delhi election result 2025 aap 2025 2025

மொத்தமுள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலையில் பாஜக 45க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி ஏறக்குறைய 35 தொகுதிகளில் கடும் போட்டி அளிக்கிறது.

காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்காத நிலையில், தற்போது பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தை பார்க்கும் போது வெறும் 3 சதவீத முன்னிலையில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி பாஜக முன்னிலையில் இருக்கும் 48 தொகுதிகளில் 15 தொகுதிகளில் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலையில் இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் பாஜக 46.8% வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியோ 43.2% வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது. இதன் மூலம் வெறும் மூன்று சதவீத வாக்கு வித்தியாசத்தில் தலைநகரான டெல்லியை ஆம் ஆத்மி கட்சி இழந்துள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து களத்தை சந்தித்து இருந்தால் டெல்லியில் நிச்சயம் வெற்றியை பதிவு செய்திருக்கலாம்.

delhi election 2025 delhi election result 2025 aap 2025 2025

காங்கிரசுக்கு கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு சதவீத வாக்குகள் இருக்கும் நிலையில் கூட்டணியாக போட்டியிட்டு இருந்தால் 49 சதவீத வாக்குகளை பெற்றிருக்கலாம். சில தொகுதிகளில் மட்டுமே பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் தற்போது முன்னிலையில் இருக்கும் தொகுதிகளில் கூட ஆம் ஆத்மி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் முன்னிலையில் உள்ளது, சில தொகுதிகளில் மட்டுமே பாஜக குறைந்த வாக்கு சதவீதத்தை கொண்டு இருக்கிறது,

காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு இருந்தால் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நஷ்டமாகி இருக்கும், ஆனால் காங்கிரசை தனித்து களமிறங்க விட்டதால் ஒட்டுமொத்த டெல்லியை ஆம் ஆத்மி இழந்திருக்கிறது. அதே நேரத்தில் திட்டமிட்டு தான் ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் பழிவாங்கி விட்டதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கோவா ஹரியானா பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்க ஆம் ஆத்மியும் ஒரு காரணம். அங்கும் கூட ஆம் ஆத்மி காங்கிரசோடு இணக்கமாகச் சென்றிருந்தால் பாஜகவை கிளீன் ஸ்வைப் செய்திருக்க முடியும். ஆனால், அங்கு ஆம் ஆத்மி கௌரவமான வாக்குகளை பெற்றும் ஆட்சியையும், பஞ்சாபில் ஆட்சியையும் பிடித்திருக்கும் நிலையில் காங்கிரஸின் நிலைமை தான் பரிதாபகரமாக உள்ளது. இதனால் காங்கிரஸ் ஆம் ஆத்மியை திட்டமிட்டு பழிவாங்கியுள்ளதாகவே விமர்சிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+