7 மாநிலம்- 13 தொகுதி இடைத் தேர்தல்கள்:பாஜகவை ”முடித்த” இந்தியா கூட்டணி- 1 இடத்தில் மட்டும் முன்னிலை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 13 தொகுதி இடைத் தேர்தல்களில் 11 இடங்களில் "இந்தியா" கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. பாஜக ஒரே ஒரு இடத்தில்தான் முன்னிலையில் இருக்கிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூ பீகாரில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா; பீகாரில் ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு; இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர், நலகார்க்; உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களூர்; மத்திய பிரதேசத்தில் அமர்வாரா; தமிழகத்தில் விக்கிரவாண்டி ஆகிய 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

Assembly by Elections 2024 bjp 2024

மே.வங்கத்தில் ருத்ரதாண்டவம்: மேற்கு வங்கத்தில் 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலுமே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் இந்த 4-ல் 3 தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது. 1-ல் மட்டும்தான் திரிணாமுல் வென்றிருந்தது. தற்போது பாஜகவிடம் இருந்த 3 தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸே கைப்பற்றி வருகிறது.

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பத்ரிநாத், மங்களூர் ஆகிய 2 தொகுதிகளிலுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பத்ரிநாத் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். மங்களூர் தொகுதியில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் பாஜகவுக்கு 3-வது இடம்தான்.

இமாச்சல பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. முதல்வர் சுக்வீந்தர் சிங்கின் மனைவி காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாக்கூர் டேஹ்ரா தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜகவின் ஹோஷ்யார் சிங்கை 9,399 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஹமிர்பூர் தொகுதியில் காங்கிரஸ், பாஜக இரண்டும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. தற்போதைய நிலையில் பாஜக 1,500 வாக்குகளில் முன்னிலையில் உள்ளது.

பீகார்: பீகாரில் ரூபாலி தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான ஜேடியூ முன்னிலையில் இருந்தது. ஆனால் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சங் தற்போது 4,239 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இத்தொகுதியில் இந்தியா கூட்டணியின் ஆர்ஜேடி வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் மேற்கு ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பகத், பாஜகவின் ஷீத்தல் அங்குரலை 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இத்தொகுதியில் 2-வது இடத்தில் இருந்து வந்த காங்கிரஸ் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ம.பி.யில் காங்கிரஸ் முன்னிலை: மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் மட்டுமே பாஜக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் இத்தொகுதியில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் 2,829 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி: தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணியின் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி கட்சியின் பாமக பின்னடைவை சந்தித்து வருகிறது. பாஜக கூட்டணியான பாமகவை விட சுமார் 50,000 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறது திமுக.

ஒரே ஒரு இடத்தில் பாஜக முன்னிலை: மொத்தம் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே தற்போதைய நிலையில் பாஜக முன்னிலை வகிக்கிறது. எஞ்சிய 12 இடங்களையும் காங்கிரஸ்- ஆம் ஆத்மி- திமுக என இந்தியா கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது.

பாஜக படுதோல்வி: லோக்சபா தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற்ர முடியாத அளவுக்கு பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் கூட்டணி கட்சிகள் தயவுடன் பாஜகவால் மத்தியில் ஆட்சி அமைக்க முடிந்தது. லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற 13 சட்டசபை தொகுதிகளிலும் பாஜகவுக்கு மிகப் பெரும் தோல்வியே கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+