டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநில கட்சிகளை வளைக்க பெரு நிறுவனங்களை நேரடியாக களம் இறக்கிய பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    மாநில கட்சிகளை வளைக்க பாஜக புதிய திட்டம்- வீடியோ

    டெல்லி: மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவைப் பெறுவதற்கு மாநில கட்சிகளை வளைக்க இம்முறை பெரும் நிறுவனங்களை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறதாம் பாஜக.

    லோக்சபா தேர்தல் முடிவுகளில் தொங்கு நாடாளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளது என்பது அனைத்து கட்சிகளின் கருத்து. எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு 300க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்றபோதும் அதை அந்த கட்சியே நம்ப தயாராக இல்லை.

    BJP talks with Regional Parties

    அதிகபட்சமாக தங்களுக்கு 220 முதல் 230 இடங்கள்தான் கிடைக்கும் என கணக்குப் போடுகிறது பாஜக. இதனால் மாநில கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு பகீரத முயற்சிகளில் அக்கட்சி இறங்கியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைக்க பல நூறு கோடிகளில் பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது புதிய முயற்சியாக பாஜக தரப்பு பெரும் நிறுவனங்களை களம் இறக்கி மாநில கட்சிகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்தெந்த மாநில கட்சிகள் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருக்கின்றனவே அந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தருவோம் என்பது முதல் பேரம்.

    சர்வாதிகாரி இந்திரா... இந்திராவின் அடிமை குலாம் நபி ஆசாத்... எச் ராஜா கடும் விமர்சனம் சர்வாதிகாரி இந்திரா... இந்திராவின் அடிமை குலாம் நபி ஆசாத்... எச் ராஜா கடும் விமர்சனம்

    இரண்டாவது பேரமாக, பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஷேர்களை பெருநிறுவனங்கள் உங்களுக்கு எழுதித் தரும் என்பதாம். இதுவரையில் இல்லாத வகையிலான இத்தகைய புதிய பேரம் குறிப்பாக தென் மாநில கட்சிகளை திக்குமுக்காட வைத்துள்ளதாம்.

    English summary
    According to the sources BJP began talks with the Regional Parties to form the next govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X