தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் இவ்வளவா? திமுக, அதிமுகவை ரொம்பவே அதிர வைக்கும் பிரசாந்த் கிஷோர்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் டபுள் டிஜிட்டில்தான் (இரட்டை இலக்கம்) இருக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களங்களில் வியூக வகுப்பாளர் என்கிற ரோலை உருவாக்கியவர் பிரசாந்த் கிஷோர். பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி என பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகங்கள் பலருக்கும் கை கொடுத்திருந்தது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் பிரசாந்த் கிஷோரின் வியூகம், கருத்துகள் மிக முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பிரசாந்த் கிஷோர், தமிழ்நாட்டில் பாஜக நிச்சயம் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தைப் பெறும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார். கடந்த ஆண்டும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் இந்தக் கருத்தை கூறியிருந்தார். தமிழகத்தில் பாஜகவுக்கு 8 முதல் 12% வாக்குகள் கிடைக்கும் என்கிற வகையில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கூறியிருந்தார்.
தற்போது பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது:
- லோக்சபா தேர்தலில் பாஜக தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியா மாநிலங்களில் கணிசமான, கூடுதலான இடங்களைப் பெறும்.
- தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் மிகப் பெரிய அளவு உயர்ந்திருக்கும் என்பதும் மிக முக்கியமானதாக இருக்கும். ஓராண்டுக்கு முன்னரேயும் இதனை சொல்லி இருக்கிறேன்.
- தமிழ்நாட்டில் முதல் முறையாக பாஜக இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதத்தைப் பெறக் கூடும்.
- தெலுங்கானா மாநிலத்தில் பாஜக முதல் அல்லது 2-வது இடத்துக்கு வரும்.
- ஒடிஷாவில் பாஜக முதல் இடத்தில்தான் இருக்கும்.
- மேற்கு வங்க மாநிலத்திலும் கூட பாஜகதான் முதலிடத்தில் இருக்கும்.
இவ்வாறு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2021 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் பாஜக அதிக வாக்குகளைப் பெறும்; பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க மேற்கு மாவட்டங்கள் ஒரு காரணமாக இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications