'சனாதன தர்ம ஒழிப்பு'- அமைச்சர் உதயநிதி முழக்கம்! டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பு பாஜக போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனிதர்களை பிளவுபடுத்துகிற சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம் நடத்த போவதாக பாஜகவினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா போன்றது. சனாதன தர்மத்தை ஏதிர்க்கக் கூடாது; ஒழித்தாக வேண்டும் என திராவிடர் இயக்க கொள்கையை வலியுறுத்தி பேசினார்.

BJP to hold Protest against Tamil Nadu Minister Udhayanidhi Stalin in Delhi

ஆனால் நாடு முழுவதும் பாஜகவினர், சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக திரித்து பொய் செய்தி பரப்பினர். இதனடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்தார்.

ஆனால் அமைச்சர் உதயநிதியோ தாம் சனாதன தர்மத்தைதான் எதிர்க்கிறேன்; காங்கிரஸ் ஒழிக என பிரதமர் மோடி பேசுகிறார்.. அப்படியானால் காங்கிரஸ் கட்சியினரை படுகொலை செய்ய மோடி சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் திமுகவின் கொள்கை என திட்டவட்டமாக கூறியிருந்தார். இருந்த போதும் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக போராட்டம், போலீசில் புகார் என வட இந்திய பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பாக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதனால் டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பாக பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+