பாஜக வென்றால் அவ்வளவுதான்.. டெல்லியில் குடிசை பகுதியை மொத்தமாக காலி செய்வாங்க - கெஜ்ரிவால் வார்னிங்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் குடிசை பகுதிகள் காலி செய்யப்படும். குடிசை பகுதிகளை பாஜகவினர் அகற்றுவார்கள் என்று முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டுக்கு பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அது என்ன? வாங்க பார்க்கலாம்.
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 8 ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இதுதவிர பிற கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.

இருப்பினும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி உள்ளது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நேரடி போட்டி என்பது ஆம்ஆத்மி, பாஜக இடையே தான் இருக்கிறது. ஏனென்றால் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது.
தற்போது அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லியில் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் அமித்ஷா சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார். அதாவது டெல்லியில் உள்ள மொத்த குடிசை பகுதிகளை விட அரவிந்த் கெஜ்ரிவால் வசித்த முதல்வர் அலுவலகத்தின் டாய்லெட் என்பது அதிக மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் உள்ள குடிசை பகுதிகளில் வளர்ச்சி பணிகளை பாஜக மேற்கொள்ளவில்லை. ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் ஓட்டு கேட்க பாஜக குடிசை பகுதிக்கு வருகிறது என்று கூறினார். இந்நிலையில் தான் டெல்லி சாகூர்பாஸ்டி பகுதியில் உள்ள குடிசை பகுதிக்கு இன்று அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்துக்கு சென்றார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பாஜகவை தாக்கி பேசினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: ‛‛பாஜக குடிசை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது அன்பு வைக்கவில்லை. ஏனென்றால் பாஜக என்பது பணக்கார கட்சி. குடிசை பகுதி மக்களுக்கும், பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவர்கள் (பாஜக) குடிசை பகுதி மக்களை பூச்சிபோல் கருதுகின்றனர். ஆனால் தேர்தலுக்கு முன்பு குடிசை பகுதி மக்களின் வாக்குகளை பெற விரும்புகின்றனர். தேர்தலுக்கு பிறகு அவர்கள் குடிசை பகுதிகளின் நிலத்தை விரும்புவார்கள். இதற்காக குடிசை பகுதிகளை இடித்து அகற்றுவார்கள்'' என்றார்.
டெல்லியை எடுத்து கொண்டால் 750 குடிசை பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 3 மில்லியன் அதாவது 30 லட்சம் மக்கள் வசிக்கின்றன. இதில் 15 லட்சம் பேருக்கு ஓட்டுரிமை என்பது உள்ளது. இந்த குடிசை பகுதிகள் 20 சட்டசபை தொகுதிகளில் பரவி உள்ளன. இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டில் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது குடிசை பகுதியில் வசிக்கும் மக்களில் 61 சதவீதம் பேர் ஆம்ஆத்மி கட்சிக்கு வாக்களித்தனர். இதன்மூலம் தான் அந்த சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதற்கு முன்பாக 2015ம் ஆண்டு தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிக்கு குடிசை பகுதியில் 66 சதவீதம் ஓட்டு கிடைத்தது. அப்போது 67 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற்று இருந்தது. 2015ம் ஆண்டை ஒப்பிடும்போது 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு குடிசை பகுதி மக்கள் ஓட்டளிக்கும் சதவீதம் என்பது சரிந்தது. இந்த முறை குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஓட்டுகளை மொத்தமாக பெற ஆம்ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் தான் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த குற்றசாட்டை முன்வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications