"போன்ல யாரு.. அடங்க மாட்டியா".. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்!!
பாஜக பெண் தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்டார்
டெல்லி: ஓவர் சந்தேகம் ஏற்பட்டு.. பாஜக பெண் பிரமுகரை அவரது கணவனே துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்தவர் முனேஷ் கோதரா.. இவர் சுனில் என்பவரை 2001ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார்.

கல்யாணமாகி சில வருடங்கள் கழித்து முனேஷூக்கு திடீரென அரசியல் ஆர்வம் வந்துவிட்டது.. தனது தோழியின் ஆலோசனையின் பேரில் பாஜகவில் இணைந்தார்.. கட்சி பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.. பாஜக மேடை ஏறி முழக்கமிடுவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே!
ஆனால், இப்படி மேடைக்கு மேடை தனது மனைவி ஏறி பேசி வருவதையும், வீட்டு வேலைகளை எதுவுமே செய்யாமல், குடும்பத்தை மறந்து கட்சியே கதி என்று கிடந்ததையும் சுனில் விரும்பவில்லை.. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் சுற்றி சுற்றி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, மனைவிக்கு கட்சியில் யாருடனோ தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் வந்தது.. சந்தேகம் வீட்டில் புயலாக வீசி தம்பதிக்குள் சண்டையும் வந்தது. சம்பவத்தன்று மனைவி தன் சகோதரியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார்... இதை பார்த்ததும் போனில் யார், என்ன என்றுகூட விசாரிக்காத கணவன், கடுப்பாகி போன சுனில், வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டு கொன்றுவிட்டார்.
சுனில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. ரத்த வெள்ளத்தில் பெண் விழுந்து கிடப்பதை பார்த்ததும் போலீசுக்கும் தகவல் சொல்ல.. அவர்கள் வந்து சுனிலை கைது செய்தனர்..மேலும் துப்பாக்கி லைசென்ஸையும் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications