THAR காரில் மளிகை பொருட்களை டெலிவரி செய்த பிளிங்கிட் ஊழியர்! என்னங்க நடக்குது இங்க? வீடியோவை பாருங்க
டெல்லி: உணவு பொருட்களை போல, மளிகை பொருட்களும் உடனுக்குடன் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'பிளிங்கிட்' டெலிவரி ஊழியர் ஒருவர் மஹிந்திரா தார் காரில் வந்து பொருட்களை டெலிவரி செய்த சம்பவம் சோஷியல் மீடியாவில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
திவ்யா ஸ்ரீவஸ்தவா எனும் இன்ஸ்டாகிராம் பயனர், கடந்த 2ம் தேதி பகிர்ந்த வீடியோவில், ஒரு டெலிவரி ஊழியர் மஹிந்திரா 'தார்' கருப்பு எஸ்யூவி காரில் இருந்து இறங்கி மளிகைப் பையை வாடிக்கையாளரின் வீட்டிற்குக் கொண்டு சென்று டெலிவரி செய்கிறார். டெலிவரி செய்த பிறகு அந்த ஊழியர் மீண்டும் காருக்குத் திரும்பும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை சிலர் மாடியிலிருந்து எடுத்திருக்கிறார்கள். வீடியோவை எடுத்தவர்கள், "இந்த ஊழியர் 'தார்' காரில் டெலிவரி செய்ய வந்துள்ளார்!" என்று ஆச்சரியத்துடன் பேசுவதை கேட்க முடிகிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்ட, ஸ்ரீவஸ்தவா நகைச்சுவையாக, பிளிங்கிட் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களைக் குறிப்பிட்டு, "என்னப்பா பிளிங்கிட், உங்க டெலிவரி ஊழியர்கள் இவ்வளவு சம்பாதிக்கிறார்களா? அல்லது மஹிந்திரா நீங்க இப்போ தார் காரை ரொம்ப குறைஞ்ச விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சிட்டிங்களா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த வீடியோ குறைந்த நேரத்தில் பரவலாக ஷேராகியிருக்கிறது. வீடியோவை 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். குறிப்பாக கமென்ட் பிரிவில் ஏராளமான நகைச்சுவையான கருத்துக்கள் வந்திருக்கின்றன. பலரும் டெலிவரி ஊழியர் "திடீர் பணக்காரர் ஆகிவிட்டார்" என்று கிண்டலடித்தனர்.
ஒரு பயனர், "இப்போ ஆசைக்கு கார் வாங்கியிருக்கலாம். ஆனா EMI கடுமையாகத் தாக்கும்போது தெரியும்" என்று கருத்துத் தெரிவித்தார். வேறு சிலர், "டெலிவரி ஊழியர் காரை வாங்க கூடுதல் நேரம் வேலை செய்கிறார்" என்று கூறியிருக்கின்றனர். மற்றொரு பயனர், "முன்பு சுற்றிக்கொண்டிருந்தவர்கள் இப்போது சம்பாதிக்கிறார்கள்" என்ற பாலிவுட் பாடலை மாற்றி, ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள் இப்போது சம்பாதிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு பயனர், "சிலர் நேரம்போக்கிற்காக அல்லது அனுபவத்திற்காக இதைச் செய்கிறார்கள். நானே ஒரு ஸ்கார்பியோ கார் உரிமையாளர் எனக்குப் பொருட்களை விநியோகிப்பது பிடிக்கும்" என்று கூறியிருக்கிறார்.
சொமோட்டோ நிறுவனத்திற்குச் சொந்தமான பிளிங்கிட், விரைவான டெலிவரிக்கு வழக்கமாக ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள்களைப் பயன்படுத்துகிறது. ₹17 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள தார் கார் டெலிவரிக்கு பயன்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது டெலிவரி ஊழியரின் தனிப்பட்ட விருப்பமா அல்லது சந்தைப்படுத்தல் உத்தியா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ஆடம்பரமான டெலிவரிக்கு உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications