ட்விஸ்ட்! ஹேமந்த் சோரன் வீட்டில் நின்ற BMW கார்.. தீரஜ் பெயரில்.. அதிர வைத்த ரெய்டு ஞாபகம் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட BMW சொகுசு கார் அவருக்கு சொந்தமானது அல்ல என்றும், காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி ஒருவருக்கு சொந்தமானது என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜார்க்கண்ட மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், ஜனவரி 20 ஆம் தேதி அவரது இல்லத்துக்கே சென்று விசாரணை நடத்தினர் அமலாக்கத்துறை அதிகாரிகள். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

 BMW Car found at Hemant Sorens delhi house not his, It belongs to Congress MP

அப்போதும் ஆஜராகாத நிலையில், ஜனவரி 29ஆம் தேதி டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் சாந்தி நிகேதன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ரூ.36 லட்சம் பணம், பிஎம்டபிள்யூ சொகுசு கார் உள்ளிட்டவையும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அடுத்த சில நாட்களில் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். கைது செய்வதற்கு முன்னதாக அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் முதலமைச்சராக கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். தனது கைதுக்கு பின்னால் மத்திய அரசும், ஆளுநர் மாளிகையும் இருப்பதாக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஹேமந்த் சோரனின் டெல்லி சாந்தி நிகேதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பிஎம்டபிள்யூ சொகுசு கார் யாருடையது என்பது குறித்த தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த சொகுசு கார், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்.பியான தீரஜ் பிரசாத் சாஹூவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, தீரஜ் பிரசாத்துக்கு நெருக்கமான மதுபான தொழிற்சாலை அதிபர்களான தீபக் சாஹு மற்றும் சஞ்சய் சாஹு ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், பாலாங்கிர் மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், அலமாரிகளில் கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சுமார் 40 பணம் எண்ணும் எந்திரங்களை கொண்டு வந்து, நாள் கணக்கில் அந்தப் பணம் எண்ணப்பட்டது. அதில் சுமார் ரூ.351 கோடி ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த ரெய்டில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் எம்.பி தீரஜ் பிரசாத் சாஹுவின் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் தான் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. அதனைத்தான் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது ஹேமந்த் சோரனை கைது செய்துள்ள நிலையில், தீரஜ் பிரசாத் சாஹுவை வரும் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத் துறை.

இதன் மூலம், ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி தீரஜ் பிரசாத் சாஹு. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் வீட்டில் நடந்த ரெய்டு மூலம் காங்கிரஸ் எம்.பி விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+