'தகர்த்து விடுவோம்' தாஜ்மகாலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. பரபரத்த சுற்றுலாப் பயணிகள்! தீவிர சோதனை
டெல்லி: உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை மேற்கோண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. தாஜ்மகாலுக்க்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலாம் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் தாஜ்மகால் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். யமுனை நதிக்கரையில் அமைந்து இருக்கும் தாஜ்மஹாலின் ரம்மியான வடிவமைப்பைக் காண இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.

தாஜ்மஹாலை பொறுத்தவரை அரசின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இங்கு மத்திய தொழில் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹாலுக்கு எப்போதும் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில்தான், உத்தர பிரதேச சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு இ மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. அந்த மிரட்டலில் தாஜ்மகால் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இரண்டு மணி நேரமாக நீடித்த வெடிகுண்டு சோதனை அதன்பிறகு முடிந்தது. தாஜ்மஹாலில் திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இ மெயிலை அனுப்பியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications