'நாசில் ஸ்பிரே'.. 6 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போட்டால் சிறந்தது: பாரத் பயோடெக்
மூக்கு வழியாக ஸ்பிரே செய்யும் தடுப்பு மருந்து ரெடியாகிறது
டெல்லி: "2-வது தடுப்பூசி போட்டு 6 மாதங்களான பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது".. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.
உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பாடுபட்டு வருகிறார்கள்.
இதற்கான மருந்தையும், சிகிச்சையையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.. இதுவரை நிரந்தர தீர்வுக்கான எந்தவிதமான மருந்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை..

மருந்துகள்
அதேசமயம் இந்த தொற்று வீரியம் அதிகரித்து மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளையும் விடாமல் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். அவைகள் குறித்த ஆய்வுகளின் முடிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில், இப்போதும் ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போக்ஸ்பயோ என்ற நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வந்தன.

அறிமுகம்
இதைதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் தற்போது விருப்பம் தெரிவித்திருந்தது... இதற்கான அனுமதியையும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.. மற்றொருபுறம், இதே தடுப்பை மருந்தை இந்திய நிறுவனமே தயாரித்து, மலிவு விலையில் கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று போக்ஸ்பயோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஸ்பிரே மருந்து
இந்த தடுப்பு மருந்தானது தொற்று பாதிப்பை தடுப்பதில் 63 சதவீதம் பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.. இந்த மருந்தை இந்த தடுப்பு மருந்தை இரு நாசிகளிலும் தலா 2 ஸ்பிரேயை ஒருவர் தானாகவே செலுத்திக்கொள்ள முடியும் என்றும், 6 முதல் 8 மணி நேரம் பாதுகாப்பைத்தரும் என்றும் சொல்லப்படுகிறது... தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமானதுதான் என்றாலும், அது 100 சதவீதம் பயன் தருவதில்லை.. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான், போக்ஸ்வெல் என்ற பெயரில் தடுப்பு மருந்து கண்டறிந்ததாக அந்நிறுவனத்தினர் மேலும் சொல்கிறார்கள்.

ஸ்பிரே
இப்போது கூடுதல் தகவல் என்னவென்றால், மொத்த உலக நாடுகளுமே, மூக்கு வழியாக செலுத்தக்கூடிய இந்த ஸ்பிரே தடுப்பூசிக்காக காத்திருக்கிறது, இது பரவலை தடுக்கும் ஒரே வழியாகும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்... பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, டிவி சேனல் ஒன்றுக்கு நடத்திய நிகழ்ச்சியில் இதை பற்றி சொல்லும்போது, "2-வது தடுப்பூசி போட்டு 6 மாதங்களான பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது.. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில், கோவேக்சினை காட்டிலும் மூக்கு வழியே செலுத்தக்கூடியது நலமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சிறந்தது
உலக நாடுகள் அனைத்துமே நாசி வழியாக செலுத்தக்கூடிய இந்த தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. இது பரவலை தடுக்கும் ஒரே வழியாகும்... நாங்கள் நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியை கொண்டு வருகிறோம். கோவேக்சினை முதல் டோஸாக தந்து விட்டு, 2வது டோஸாக நாசி வழியாக செலுத்துகிற தடுப்பூசியை தருவது குறித்து சிந்திக்கிறோம்... கொரோனா பாதித்தவர்களுக்கு அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications