நம் நாட்டின் எல்லை சாமி இவங்க தான்.. 60வது ஆண்டு விழாவில் எல்லை பாதுகாப்பு படை.. சிலிர்க்கும் வரலாறு
டெல்லி: நாம் தினமும் நம் வீட்டில் நிம்மதியாக தூங்குகிறோம் என்றால் அதற்கு நாட்டு எல்லையில் விடிய விடிய கண் விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவம், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தான் முக்கிய காரணம். நம் நாட்டின் 6,623 கிலோமீட்டர் எல்லை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடும் எல்லை பாதுகாப்பு படை தோன்றியதன் 60வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் சூழலில் அவர்களின் பணி என்ன? அந்த படை தோன்றிய வரலாறு பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை இயங்கி வருகிறது. இந்த முப்படைகளும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த படைகள் தவிர மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் 7 படைகள் செயல்பட்டு வருகின்றன. ஏஆர் எனப்படும் அசாம் ரைபிள்ஸ், பிஎஸ்எஃப் எனப்படும் எல்லை பாதுகாப்பு படை, சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஐடிபிபி எனும் இந்தோ - திபெத் எல்லை படை, என்எஸ்ஜி எனும் தேசிய பாதுகாப்பு படை மற்றும் எஸ்எஸ்பி எனும் சாஸ்த்ரா சீமா பால் உள்ளிட்ட 7 படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது.
இதில் மிகவும் முக்கியமான படை என்றால் அது பிஎஸ்எஃப் எனும் எல்லை பாதுகாப்பு படை தான். இது ஒரு பாரா மிலிட்டரி அமைப்பாகும். அதாவது புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் துணை ராணுவப்படை என்று கூறலாம். இந்த படை வீரர்களின் கொள்கை என்பது எப்போதும், எந்த வேளையிலும், எந்த இடத்திலும் பணியாற்ற தயாராக இருப்பது என்பது தான். அதோடு ‛மரணம் வரை கடமையை செய்ய வேண்டும்' என்பது தான் இந்த படையின் வாசகமாக உள்ளது.

இதை பார்த்தாலே தெரியும். இதன்மூலம் ராணுவத்துக்கு நிகராக சேவையாற்றும் படைகளில் ஒன்று தான் எல்லை பாதுகாப்பு படை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.இந்த படையை சேர்ந்தவர்கள் தான் பாகிஸ்தான், வங்கதேசத்துடன் நம் நாடு பகிர்ந்து வரும் 6,623 கிலோமீட்டர் எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் நம் நாட்டின் எல்லை சாமிகளாக உள்ளனர். இந்த படையில் மொத்தம் 2.65 லட்சம் பேர் உள்ளனர். அதோடு உலகில் பெரிய எல்லை பாதுகாப்பு படை என்ற பெயர் பிஎஸ்எஃப்க்கு உள்ளது.

இந்த படையில் மொத்தம் 193 பட்டாலியன்கள் உள்ளன. இதுதவிர விமானம் கப்பல் பிரிவு, கமாண்டோ பிரிவு, பீரங்கி படை பிரிவுகள் என்று தனித்தனி பிரிவுகள் உள்ளன. இந்த படையின் பிரதான பணி என்பது பாகிஸ்தான், வங்கதேசத்துடன் உள்ள இந்திய எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது மட்டும் இல்லை.

பேரிடர் காலங்களில் உதவி செய்வதும் இந்த படை வீரர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக உள்ளது. இதற்காக 4 பட்டாலியன்கள் தனியாகவே உள்ளன. இதுதவிர ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இடதுசாரி பயங்கரவாதிகளை (நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட்டுகள்) கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த படையினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதேபோல் மணிப்பூரில் தொடர்ந்து வரும் கலவரத்தின்போதும் இந்த படை வீரர்கள் குவிக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவதையும் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி எல்லை மட்டுமின்றி உள்நாட்டு பாதுகாப்பிலும் இந்த படை வீரர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

மேலும் இந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 1971 ம் ஆண்டில் நடந்த இந்தோ பாகிஸ்தான் போர், 1971ல் வந்த வங்கதேச புரட்சி போர், 1999ல் நடந்த கார்கில் வார் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்காற்றினர். அதோடு இந்தியாவின் முதல் வரிசை பாதுகாப்பு படை வீரர்கள் என்ற பெயரும் இந்த படை வீரர்களுக்கு உண்டு. இப்படியாக நமது பாதுகாப்புக்காக தொடர்ந்து கண்விழித்து செயல்பட்டு வரும் இந்த பிஎஸ்எஃப் எனும் எல்லை பாதுகாப்பு படையின் 60 வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த எல்லை பாதுகாப்பு படை என்பது 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்தோ - பாகிஸ்தான் போரை தொடர்ந்து இந்த படை உருவாக்கப்பட்டது. இந்த எல்லை பாதுகாப்பு படையின் நிறுவன தலைவர் பெயர் கே.எஃப் ருஸ்தம்ஜி.
இத்தகைய பெருமை கொண்ட இந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பணி மற்றும் தியாகத்தை இந்த நாளில் நாம் அனைவரும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல்












Click it and Unblock the Notifications