குத்துச் சண்டை வீரர்.. பொதுக் கூட்டத்தில், மோடியை வரலாறு காணாத அளவு கலாய்த்து தள்ளிய ராகுல் காந்தி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு குத்துச் சண்டை வீரர் போன்றவர், ஆனால், அவர் குத்துவிட்ட இடம்தான் சரியில்லை என்று கிண்டல் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
ஹரியானா மாநிலம் பிவானி நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.
2008ம் ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக்கிற்கு, 4 குத்துச்சண்டை வீரர்கள் இந்த மாவட்டத்திலிருந்து இந்தியா சார்பில் பங்கேற்றனர். எனவே, குத்துச் சண்டையையே தனது பிரச்சாரத்தின் மையக் கருவாக எடுத்து தாக்குதல் பஞ்ச்களை தொடுத்தார் ராகுல் காந்தி.

குத்துச் சண்டை வீரர்
"கடந்த லோக்சபா தேர்தலில், புதிய குத்துச்சண்டை வீரர் ஒருவரை இந்தியா அறிமுகம் செய்தது. 58 இஞ்ச் மார்பு இருப்பதாக கூறிக் கொண்டு, அவர், வளையத்திற்குள் வந்தார். ஏழ்மை, விவசாயிகள் பிரச்சினை, ஊழல் போன்றவற்றை அந்த குத்துச் சண்டை வீரர் தாக்குவார் என எதிர்பார்த்தோம்" என்று மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார் ராகுல் காந்தி.

பயிற்சியாளர் அத்வானி
இதன்பிறகு, மேலும் பேச்சை தொடர்ந்த ராகுல் காந்தி பேசியதை பாருங்கள். குத்துச் சண்டை வீரர் வளையத்திற்குள் வந்து நின்றபோது, அருகே பயிற்சியாளர் அத்வானி, நிதின் கட்கரி உட்பட மொத்த டீமும் உடனிருந்தனர். இதைப் பார்த்த பார்வையாளர்கள் (மக்கள்), இந்த குத்துச் சண்டை வீரர், நமது வங்கிக் கணக்கிற்கு தலா ரூ.15 லட்சம் பணம் போடுவார் என எதிர்பார்த்தனர்.

அத்வானி மீது குத்து
அந்த, குத்துச் சண்டை வீரர் வளையத்திற்குள் வரும்போது, நிறைய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருந்தார். வெளிச்சம் அவர் மீது பட்டு ஜொலித்தது. ஆனால், வந்ததும் முதல் வேலையாக, தனது பயிற்சியாளர் அத்வானி முகத்தில் ஓங்கி குத்துவிட்டார். அத்வானி அதிர்ச்சியடைந்தார். இதன்பிறகு, தனது அணி மீது பாய்ந்தார், அந்த குத்துச் சண்டை வீரர். நிதின் கட்கரி, அருண் ஜேட்லி என அடுத்தடுத்து நின்றவர்கள் முகத்தில் குத்துமழை பொழிந்தார், அந்த குத்துச் சண்டை வீரர்.

மக்கள் மீதும் அடி
இத்தோடு விட்டாரா, வளையத்தை விட்டு வெளியே வந்து, கூட்டத்திற்குள் புகுந்து, சிறு வணிகர்கள், விவசாயிகள் முகங்களிலும் குத்து விட்டார். சிறு வணிகர்களுக்கு, பணமதிப்பிழப்பு பெயரில் குத்து, ஜிஎஸ்டி பெயரில் குத்து, கடன் தள்ளுபடி கேட்ட விவசாயிகளுக்கும் குத்துவிட்டார் அந்த, குத்துச் சண்டை வீரர். இவ்வாறு சரமாரியாக மோடியை தாக்கி பேசினார் ராகுல் காந்தி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications