ஹரியானா வாக்காளர் லிஸ்ட்டில் பெயர்! பிரேசில் மாடல் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்! இப்படி சொல்லிட்டாங்களே!
டெல்லி: ஹரியானா வாக்காளர் பெயர் பட்டியலில் பிரேசில் மாடல் லாரிசாவின் பெயர் இடம்பெற்றிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து லாரிசா விளக்கமளித்திருக்கிறார்.
வாக்கு திருட்டு குறித்து நேற்றைய தினம் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி புதிய குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். ஹரியானா மாநிலத்தின் மொத்த வாக்காளர் 2 கோடி. இதில் சுமார் 25 லட்சம் போலி வாக்குகள் இருக்கின்றன. அதாவது ஹரியானாவில் 8 பேரில் ஒருவர் போலி வாக்காளர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

வெவ்வேறு பெயர்களில் 22 வாக்காளர் அட்டை
குறிப்பாக பெண் ஒருவர், 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களித்திருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். அந்த பெண் ஹரியானாவை சேர்ந்தவரோ, பீகாரை சேர்ந்தவரோ, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவரோ கிடையாது. பிரேசிலை சேர்ந்த மாடல் லாாரிசா என்று கூறியிருந்தார். இவரின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை ஸ்வீட்டி, சீமா, சரஸ்வதி என 22 வெவ்வேறு பெயர்களில் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார்.
The name of the Brazilian Model seen in @RahulGandhi's press conference is Larissa. Here's her reaction after her old photograph went viral. pic.twitter.com/K4xSibA2OP
— Mohammed Zubair (@zoo_bear) November 5, 2025
என்ன சொன்னார் லாரிசா?
இந்த குற்றச்சாட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரேசில் மாடல் லாரிசா கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்றிருக்கின்றன. "நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு நகைச்சுவை சொல்லப் போகிறேன். இது மிகவும் பயங்கரமானது! என் பழைய படத்தைப் பயன்படுத்துகிறார்களா? என் படம் பழையது. நான் இளமையாக இருந்தபோது எடுக்கப்பட்டது. இந்தியத் தேர்தலில் என்னை இந்தியப் பெண்ணாக சித்தரித்து என் படத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது முட்டாள்தனம்.
இந்த விவகாரம் குறித்து கேட்க ஒரு பத்திரிகையாளர் என்னை தொடர்புகொள்ள முயன்றார். என் நண்பர் எனக்கு இன்னொரு படத்தை அனுப்பினார், அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். இந்தச் சூழ்நிலை விசித்திரமானது." என்று லாரிசா கூறியிருக்கிறார். அவர் x தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பரவலாக ஷேராகி வருகிறது.
தொடர் குற்றச்சாட்டு
கடந்த 2024ல் நடந்த மக்களவை தேர்தலில் ஹரியானாவில் உள்ள மொத்தம் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளை பாஜகவும், 5 தொகுதிகளை காங்கிரசும் கைப்பற்றியிருந்தது. ஆனால், அதே ஆண்டில் அடுத்து சில மாதங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இது பரவலான சந்தேகத்தை கிளப்பியிருந்தது. இந்த தோல்விக்கு காரணம் வாக்கு திருட்டுதான் என்று விமர்சித்திருந்த ராகுல் காந்தி, இந்த திருட்டுக்கு உடந்தையாக தேர்தல் ஆணையமும் இருந்திருக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ஒரே வீட்டில் 501 பேர்
வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். ஏற்கெனவே கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் இதேபோன்று வாக்கு திருட்டு நடந்திருப்பதாகவும், ஒரே வீட்டு முகவரியில் நூற்றுக்கணக்கில் வாக்காளர்கள் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்த முகவரிக்கு சென்று ஆய்வு செய்தபோது வெறும் 2-4 பேர் மட்டுமே இருந்ததாக காங்கிரஸ் கூறியிருந்தது. அதேபோல ஹரியானாவில் ஒரே வீட்டு முகவரியில் 501 பேர் வசிப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உண்மையில் அங்கு யாருமே வசிக்கவில்லை என்று எங்கள் ஆய்வில் தெரிய வந்ததாக ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications