ஆக்சிஜனுக்காக தவிக்கும் இந்தியா.. உருகிய பிரெட் லீ.. 1 பிட்காயின் நன்கொடை தருவதாக அறிவிப்பு
டெல்லி: இந்தியா எனது 2வது தாயகம். கொரோனாவுக்கு எதிரான போரில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக 1 பிட்காயின் நிதியை நன்கொடையாக அளிக்கிறேன் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
ஒரு பிட்காயின் என்பது இந்திய மதிப்பில் 40 லட்சத்து 95 ஆயிரத்து 991 ரூபாய் ஆகும். ஏற்கனவே ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் இந்தியாவுக்கு 50,000 டாலர் நிதியுதவி அளித்துள்ள நிலையில் தற்போது பிரெட் லீயும் நன்கொடை அளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரையொட்டி தற்போது இந்தியாவில் முகாமிட்டுள்ளார் பிரெட் லீ. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா எப்போதுமே எனக்கு 2வது தாயகமாகும். இந்திய மக்களிடமிருந்து எனக்கு தொழில்முறை ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போதுமே அன்பும், ஆதரவும் அபரிமிதமாகவே கிடைத்துள்ளது. எனது ஓய்வுக்குப் பிறகும் கூட இந்திய மக்களின் இதயத்தில் எனக்கு தனி இடம் உள்ளது. இந்திய மக்கள் தற்போதைய கொரோனா போராட்டத்தில் சிக்கித் தவிப்பது என்னை வருத்தமுற வைத்துள்ளது.

இப்போது அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இந்தப் போரில் வெல்ல வேண்டும். தேவைப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும். பாட் கமின்ஸ் அதைத் தொடங்கி வைத்துள்ளார். அவரைப் பாராட்டுகிறேன். எனது பங்களிப்பாக 1 பிட் காயின் நிதியை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரெட் லீ. இந்தப் பணத்தைக் கொண்டு இந்திய மக்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வாங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications