வெனிசுலா பஞ்சாயத்து! அமெரிக்காவை கண்டித்த BRICS! தலைமையேற்றும்.. அமைதியாய் கடந்து போன இந்தியா!
டெல்லி: வெனிசுலா விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை கடுமையாக கண்டித்திருந்தன. ஆனால், 2026ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமையாக பொறுப்பேற்றிருக்கும் இந்தியா, பட்டும் படாமலும் இந்த விவகாரம் குறித்து பேசியிருப்பது சர்வதேச அளவில் விவாதமாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமையாக அதன் உறுப்பு நாடுகள் வகிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கையான நிலைப்பாடு
இந்த சமயத்தில்தான் வெனிசுலாவில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரசும் கைது செய்தது. பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பிலுள்ள இந்தியா, இந்த நடவடிக்கையை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்ததே தற்போதைய பஞ்சாயத்து.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா போன்றவை அமெரிக்காவுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியா கவலை மட்டும் தெரிவித்திருந்தது. இந்தியா இந்த விஷயத்தை எச்சரிக்கையாக அணுகியிருந்தது. அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்ட அழுத்தங்களே இந்தியாவின் இந்த எச்சரிக்கை நிலைப்பாட்டிற்குக் காரணம்.
இந்தியாவின் ஆதரவு
இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்ததால் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. எனவேதான் டிரம்ப் நிர்வாகத்தை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்தது. இருப்பினும், வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியா தனது ஆதரவை உறுதியாக தெரிவித்திருக்கிறது.
இந்தியா சொன்னது என்ன?
"சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து மாறிவரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். வெனிசுலாவின் அமைதியை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை அமைதியாகத் தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரிக்ஸ் நாடுகள்
ஆனால், பிரிக்ஸ் அமைப்பின் பிற நாடுகள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை வெளிப்படையாகக் கண்டித்தன. அமெரிக்காவின் நடவடிக்கையை ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்று ரஷ்யாவும், வெனிசுலா அதிபரை பலவந்தமாக அகற்றியதன் மூலம், சர்வதேச சட்டத்தை அமெரிக்கா மீறியுள்ளது என்று சீனாவும் விமர்சித்திருந்தது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இந்தத் தாக்குதல்களை வரம்பு மீறிய செயல் என்றார். தென்னாப்பிரிக்கா இதை ஐ.நா. சாசனத்தின் மீதான அப்பட்டமான மீறல் என்று கூறி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்தது.
ஐ.நா. சாசனக் கொள்கைகளைக் கடைபிடிப்பதை பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியிருந்தும், ஜனவரி 1 முதல் தலைமைப் பொறுப்பில் இருந்த இந்தியா, வெனிசுலா விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் கருத்தை எதிரொலிக்கவில்லை.
இந்தியா-அமெரிக்கா உறவு
டிரம்ப் விதித்த வரிகள் மட்டுமல்லாது இந்தியா-அமெரிக்கா உறவில் பல சிக்கல்கள் கடந்த காலங்களில் உருவாகியிருகின்றன. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு சொன்னது, பாகிஸ்தான் தலைவர்களுடனான டிரம்பின் நல்லுறவு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து வெடித்த இந்தியா-பாக்., மோதலை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் சொந்தம் கொண்டாடி வருவது, அதற்க எதிராக மத்திய அரசு உறுதியாக பேசாமல் இருப்பது என இந்தியா-அமெரிக்கா உறவில் அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன.
இந்தியாவும்-அமெரிக்காவும் தற்போது உறவுகளில் உள்ள சிக்கலைத் தீர்க்க முயன்றாலும், வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவேதான் இந்தியா சைலன்டாக இருப்பதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications