எல்லையில் மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி.. பக்கா ஸ்கெட்ச் போட்டு காலி செய்த பாதுகாப்பு படை!
காஷ்மீர்: காஷ்மீர் எல்லையில் மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இரவு 11 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றத்தை பயன்படுத்தி ஊடுருவ முயற்சி நடைபெற்ற நிலையில் எல்லை பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து முறியடித்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு எல்லையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு உடனுக்குடன் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

15 நகரங்கள் குறி
எல்லை மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் இன்று இரவு 8 மணி முதல் ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலம் புகுந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. எனினும் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் 8 விமானங்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவும் பாகிஸ்தான் இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்து இருந்தது. இன்று பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்து வருவதால் எல்லை மாநிலங்களில் உச்சக் கட்ட பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியா தக்க பதிலடி தரும் என்று பதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
மிகப்பெரிய ஊடுருவல் முறியடிப்பு
இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போர் பதற்றம் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானியர்கள் ஊடுருவ முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் எல்லையில் மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றத்தை பயன்படுத்தி ஊடுருவ முயற்சி நடைபெற்ற நிலையில் எல்லை பாதுகாப்பு படை தீவிரமாக கண்காணித்து முறியடித்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications