பிப்.1ம் தேதி முழு பட்ஜெட் இல்லை.. இடைக்கால பட்ஜெட்தான்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
வருகிற பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video

டெல்லி: வருகிற பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் அதே நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான நாளும் நெருங்கிவிட்டது. வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
நான்கரை வருட மோடி ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில் கடைசி 5 மாதங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டியது மட்டும் பாக்கியுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

என்ன செய்தி
எப்போதும் கடைசி பட்ஜெட் அந்த கடைசி 5 மாதங்களுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதாவது பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான செலவுகளுக்கு மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதில் பெரும்பாலும் முக்கிய பெரிய திட்டங்கள் இருக்காது. ஆனால் மத்திய பாஜக அரசு இதற்கு பதிலாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறது என்று செய்திகள் வந்தது.

மிக மோசம்
தேர்தலை முன்னிட்டு முழு ஒரு வருட பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதில் நிறைய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வந்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கியது. நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக போராடுவோம் என்றும் கூட கூறியது.

மறுப்பு தெரிவித்தது
இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. முழு பட்ஜெட் தாக்இந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. முழு பட்ஜெட் தாக்கலாகும் என்ற செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்தான் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. கலாகும் என்று செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்தான் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருக்கிறது.

பல விஷயம்
ஆனாலும் இதில் நிறைய திட்டங்கள் இருக்க வாய்ப்புள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறுகிறார்கள். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருவதால், பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications