வருமான வரி.. ஆதிச்சநல்லூர்.. விவசாயம்.. சென்னை எக்ஸ்பிரஸ் வே.. இதுதான் இந்திய பட்ஜெட் 2020!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Budget 2020 : Nirmala Sitharaman will launch the budget today

    டெல்லி: நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.

    இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. நிறைய சலுகைகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானது. பொருளாதார மந்த நிலை நிலவும் நிலையில் பட்ஜெட் அதிக கவனம் பெற்றது .நாடு முழுக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பு பிரச்சனை, பணமதிப்பிழப்பு, காஷ்மீரில் தலைவர்கள் சிறைவைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இடையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் காலை 11 மணிக்கு 2.42 மணி நேரம் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    சிவப்பு துணி

    சிவப்பு துணி

    2020 பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வருடம் போல இந்த வருடமும் சிவப்பு நிற பை ஒன்றை பயன்படுத்தி உள்ளார். இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதெல்லாம் அதை நிதி அமைச்சர்கள் சூட் கேஸ் ஒன்றில் கொண்டு வருவதுதான் வழக்கம். இந்தியாவில் பிரிட்டன் அரசு ஆட்சி செய்த போது இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. அந்த நடைமுறையை மீண்டும் இவர் முறியடித்துள்ளார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த பட்ஜெட் மூலம் பண தட்டுப்பாடு, நிதி பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட் மூன்று விஷயங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. 1. ஆர்வமிக்க இந்தியா, 2. பொருளாதார வளர்ச்சி மற்றும் 3. அக்கறையுள்ள சமூகம் ஆகிய மூன்று விஷயங்களை மையமாக வைத்து இந்த பட்ஜெட்டை உருவாக்கினேன். நாம் இந்த சமுதாயம் குறித்து கவனம் கொள்ள வேண்டும். அதற்கு இந்த பட்ஜெட் உதவும், என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

    விவசாயம் எப்படி

    விவசாயம் எப்படி

    இந்த பட்ஜெட்டில் விவசாயத்துறை ஊக்கத்திற்கு 16 அம்ச திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். விவசாயிகளுக்கு கடன் வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு பட்ஜெட்டில் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக மேம்பாட்டிற்காக ரூ 1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ 12,955 கோடி அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வரிகள் எவ்வளவு

    வரிகள் எவ்வளவு

    இந்த பட்ஜெட்டில் பெரும்பாலான பொருட்கள் மீதான வரிகள் மாற்றப்பட்டுள்ளது.செய்தி பிரின்ட், குறைந்த எடை பூசப்பட்ட காகிதத்திற்கான சுங்க வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது, அதன் விலை இதனால் குறையும். கச்சா சர்க்கரை, வேளாண் விலங்கு சார்ந்த பொருட்கள், ஆடையெடுத்த பால், சில மது பானங்கள், சோயா ஃபைபர், சோயா புரதம் ஆகியவற்றிற்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது, இதனால் அதன் விலை குறையும்.சிகரெட், புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை உயரும். இறக்குமதி செய்யப்பட்ட காலணிகள் மற்றும் பர்னிச்சர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் விலையும் இதனால் உயரும்.

    வேறு என்ன

    வேறு என்ன

    நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் நீர் மேலாண்மையை மேம்படுத்த திட்டம். மீன் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.விவசாய துறை, அது தொடர்பான செயல்பாடுகள், நீர் மேலாண்மை, கிராமப்புற மேம்பாடு அனைத்தும் சேர்த்தும் 2.83 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். 2020-2021ல் இந்த நிதி பயன்படுத்தப்படும். மிக முக்கியமாக விவசாயிகளுக்காக நாடு முழுக்க அவர்கள் பயன்படுத்த நிலங்களில் சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும். இலவசமாக இந்த சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும். இதன் மூலம் உருவாக்கப்படும் மின்சாரம் இலவசமாக, விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    சாலை மேம்பாடு

    சாலை மேம்பாடு

    தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம். சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்படும் இந்த சாலை வர்த்தக வழித்தடமாக இருக்கும். இந்த சாலை இருக்கும் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும், என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    கிசான் எப்படி

    கிசான் எப்படி

    விவசாயிகளுக்காக முதல்முறையாக கிசான் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும். இதில் குளிர்சாதன வசதிகள் இருக்கும். அதேபோல் விமானத்தில் காய்கறிகளை கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்.

    பெங்களூர் எப்படி

    பெங்களூர் எப்படி

    பெங்களூர் நகருக்கு போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலை கிடைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார் . அதன்படி பெங்களூர் புறநகர் ரயில் செயல்படுத்தப்பட உள்ளது. பெங்களூரு நகரில் 18,600 கோடி செலவில் புற நகர் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்படும். ரயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ரயில்வே எப்படி

    ரயில்வே எப்படி

    நாடுமுழுவதும் உள்ள ஆயிரம் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும்.பெங்களூர் நகரில் புறநககர் ரயில் வசதி ஏற்படுத்தி தரப்படும். மெட்ரோ பாணியில் தனியாருடன் இணைந்து சுமார் ரூ18000 கோடி செலவில் புறநகர் ரயில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும்மும்பை - அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள ரயில்வே வழித்தடங்கள் குறிப்பாக ரயில் நிலையங்களில் சோலார் வசதி செய்து தரப்படும்.

    செம அறிவிப்பு

    செம அறிவிப்பு

    இந்தியாவில் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர் உட்பட ஐந்து இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மொத்தம் நாடு முழுக்க ஐந்து இடங்களில் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ராக்கிகார்க்கி, ஹஸ்தினாபோர், சிவ்சாகர், தோலாவீரா மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அதேபோல் நாடு முழுக்க சுற்றுலா துறையை வளர்க்க 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும், என்றுள்ளார்.

    இணையம் எப்படி

    இணையம் எப்படி

    பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும். அதேபோல் நாடு முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த கூடங்கள் அமைக்கப்படும், டேட்டா சென்டர்கள் என்று இது அழைக்கப்படும். நாடு முழுக்க இது அமைக்கப்படும். இங்கு ஏஐ தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படும். இது தொடரான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும். மொத்தம் 8000 கோடி ரூபாய் இதற்கு வழங்கப்படும். இதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும். கிராமங்களில் இணையம் கொண்டு வர 6000 கோடி ரூபாய் அளிக்கப்டும்.

    எவ்வளவு

    எவ்வளவு

    2022ம் ஆண்டின் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தும். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கு 100 கோடி ரூபாய் செலவு செய்யப்படும், இது உலக அளவில் பெரிய நிகழ்வாக இருக்கும், என்று பட்ஜெட் அறிவிப்பின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில் கல்வித்துறைக்கு கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு 69000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வருமான வரி எப்படி

    வருமான வரி எப்படி

    2020 பட்ஜெட் அறிவிப்பில் தனி நபர் வருமான வரி சலுகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சலுகை விருப்ப தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்சி மற்றும் எஸ்டி நலத்துறைக்கு 85000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை மற்றும் வர்த்தகத்திற்கு 27000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்நிய முதலீடு

    அந்நிய முதலீடு

    கல்வித்துறையில் அன்னிய நேரடி முதலீடு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மருத்துவர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனைகளுடன் இணைக்கப்படும். இதற்காக பேராசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். தேசிய போலீஸ் பல்கலைக் கழகம், தேசிய தடவியல் பல்கலைக் கழகம் ஆகியவை அமைக்கப்படும். 100 சிறந்த தனியார் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் ஆன்லைன் மூலம் டிகிரி பட்டம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    என்ன விற்பனை

    என்ன விற்பனை

    ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.ஐடிபியில் உள்ள மத்திய அரசின் பங்குகளையும் விற்பனை செய்யப்படும். அரசின் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று ரூ2.1 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய வரலாற்றில் மிக நீண்ட நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+