இனி விமானம், ரயில் மூலம் பார்சல்.. விவசாயிகளுக்காக கிசான் ரயில் அறிமுகம்.. நிர்மலா கலக்கல்!
இந்தியா முழுக்க காய்கறிகளை எடுத்துச் செல்ல 'கிசான் ரயில்' அறிமுகம் செய்யப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புவெளியிட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: இந்தியா முழுக்க காய்கறிகளை எடுத்துச் செல்ல 'கிசான் ரயில்' அறிமுகம் செய்யப்படும், பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புவெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இந்த அறிவிப்பில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் தொடர்பான அறிவிப்புகள் அதிகமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளுக்காக முதல்முறையாக கிசான் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும். இதில் குளிர்சாதன வசதிகள் இருக்கும்.
அதேபோல் விமானத்தில் காய்கறிகளை கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்.
அதேபோல் இந்தியாவில் உள்ள காய்கறிகளுக்கு நபார்ட் மூலம் அடையாளம் காணப்பட்டு, புவி சார் குறியீடு வழங்கப்படும். கிராமங்களில் காய்கறி , பழங்களை பதப்படுத்தும், பாதுகாக்கும் முறைகள் கொண்டு வரப்படும். இதற்கான செலவு குறையும்.
இதை பெண்கள் நாடு முழுக்க நிர்வகிக்கும் வகையில் செயல்படுத்தப்படும். பெண்கள் மீண்டும் நாட்டின் தனலட்சுமிகளாக மாறுவார்கள். ஒரு மாவட்டம், ஒரு பொருள் என்ற திட்டம் மூலம் நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒரு பொருள் அதிக கவனத்துடன் உருவாக்கப்படும்.மொத்தமாக விவசாய துறைக்கு 15 லட்சம் கோடி ரூபாய்க்கு செலவு செய்யப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications