பட்ஜெட் 2021 : 1947 முதல் 2020 வரை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள்

2021ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பற்றி பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிப்ரவரி 1 ஆம் தேதி 2021 -22 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பற்றியும் முக்கிய பட்ஜெட்கள் பற்றியும் பார்க்கலாம்.

பிரெஞ்சு சொல்லான 'Bougette' என்கிற வார்த்தையிலிருந்து திரிந்து வந்ததுதான் 'பட்ஜெட்'. பிரெஞ்சில் 'பவ்கெட்' என்றால் தோலால் செய்யப்பட்ட பர்ஸ் அல்லது பையைக் கூறிக்கும். ஆண்டின் வரவு செலவு குறித்த ஆவணங்களைத் தோலாலான பைகளில் கொண்டு செல்வதால் பட்ஜெட் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.

Budget 2021: The finance ministers who presented the federal budget from 1947 to 2020

லண்டனில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, அந்நாட்டின் நிதியமைச்சர்கள் சிவப்பு நிற பெட்டி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றி வருகின்றனர். பெரும்பாலும் அந்தப் பெட்டியின் வெளிப்புறம் தோலினால் ஆனதாகவே இருக்கும். அந்தப் பெட்டியினுள்ளேதான் பட்ஜெட் உரைக்கான தாள்கள் இருக்கும். இதைத்தான் இத்தனை ஆண்டுகளாக இந்தியாவின் நிதியமைச்சர்களும் பின்பற்றி வந்தனர்.

ஆண்டுக்கு ஆண்டு பெட்டியின் நிறங்கள் மாறுமே தவிரப் பெட்டியைப் பயன்படுத்துவது மாறியதே இல்லை. ஆனால், கடந்த ஆண்டுதான் சிவப்பு நிறத் துணிக் கோப்பில் பட்ஜெட் தாள்களைக் கொண்டுவந்து மாற்றம் காட்டினார் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்களையும் முக்கிய பட்ஜெட்களையும் பார்க்கலாம்.

1. ஆர்.கே.சண்முகம் (1947 - 1949 வரை) இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
2. ஜான் மத்தாய் (1949 - 1950) - இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
3. சி.டி. தேஷ்முக் (1950 - 1957) - 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
4. டி.டி.கிருஷ்ணமாச்சாரி (1957 - 1958), (1963 - 1965) - 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
5. ஜவஹர்லால் நேரு (பிப்ரவரி 13 1958 முதல் மார்ச் 13 1958 வரை) - ஒரு முறை மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்தார்.
6. மொரார்ஜி தேசாய் (1958 - 1963), (1967 - 1969) - 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
7. சச்சிந்தரா சதுர்வேதி (1965 - (1967) - 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
8. இந்திரா காந்தி (1970 - 1971) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
9. ஒய்.பி. சவாண் (1971 - 1975) - 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
10. சி.சுப்பிரமணியம் - (1975 - 1977) - 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
11. எம்.பாட்டீல் (1977 - 1979 - 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
12. சரண் சிங் ( ஜன. 24, 1979 - ஜூலை 28, 1979) - ஒரு முறை மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
13. என்.பகுகுணா ஜூலை 28, 1979 - ஜனவரி 14, 1980) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
14. ஆர்.வெங்கட்ராமன் (ஜனவரி 14, 1980 - ஜனவரி 15, 1982) - 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
15. பிரணாப் (ஜனவரி 15, 1982 - டிசம்பர் 31, 1984), ஜனவரி 24, 2009 - ஜூன் 26, 2012) - 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
16. வி.பி.சிங் (டிசம்பர் 31, 1984 - ஜனவரி 24, 1987) - 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
17. ராஜீவ் காந்தி (ஜனவரி 24, 1987 - ஜூலை 25, 1987) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
18. என்.டி. திவாரி (ஜூலை 25, 1987 - ஜூன் 25, 1988) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
19. எஸ்.பி. சவாண் (ஜூன் 25, 1988 - டிசம்பர் 2, 1989) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
20. மது தண்டவதே (டிசம்பர் 2, 1989 - நவம்பர் 10, 1990) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
21. யஷ்வந்த் சின்ஹா (நவம்பர் 10, 1990 - ஜூன் 21, 1991), மே 16, 1996 - ஜூன்1, 1996), மார்ச் 19, 1998 - ஜூலை 1, 2002) ஆண்டுகளில் ஏழுமுறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
22. மன்மோகன் சிங் (ஜூன் 21, 1991 - மே 16, 1996), (நவம்பர் 30, 2008 - ஜனவரி 24, 2009), (ஜூன் 26, 2012- ஜூலை 31, 2012) - 6 முறை.
23. ப.சிதம்பரம் (ஜூன் 1, 1996 - ஏப்ரல் 21, 1997), மே 1, 1997 - மார்ச் 19, 1998), (மே 22, 2004-நவம்பர் 30, 2008), ஜூலை 31, 2012 - மே 16, 2-14) - 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
24. ஐ.கே. குஜ்ரால் (ஏப்ரல் 21, 1997 - மே 1, 1997) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
25. ஜஸ்வந்த் சிங் (ஜூலை 1, 2002 - மே 22, 2004) - 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
26. அருண் ஜெட்லி (2014 முதல் 2019) - 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
27 நிர்மலா சீதாராமன் 2019 முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்

எந்த பட்ஜெட்டில் என்ன சிறப்பு:

இந்தியாவின் முதல் நிதியமைச்சராக பொறுப்பேற்ற ஆர்.கே.சண்முகம் செட்டி, சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை நவம்பர் 26, 1947 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். தோல்பையில் பட்ஜெட்டை எடுத்து வந்து தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளுள் இதுவும் ஒன்று. இந்தப் பட்ஜெட்டில் வேளாண்மை மீது முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அடுத்தப் பத்தாண்டு காலக் கட்டத்தில் தொழில்துறையின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தப்பட்டது. மேலும் வனத்துறை, மீன்வளம் மற்றும் ஜவுளித் துறைகள் என எல்லாப் பகுதிகள் மீதும் கவனம் செலுத்தப்பட்டது.

குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஜான் மத்தாய் . முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் இதுவாகும். தேஷ்முக் ஏழுமுறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

1973-74 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி அரசில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது கருப்பு பட்ஜெட் என இன்றளவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், முதன்முறையாக 550 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சர் யஷ்வந்த்ரோ பி.சவான் தாக்கல் செய்தார். நிலக்கரி சுரங்கங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், காப்பர் கார்ப்பரேஷன் ஆகியவற்றை தேசியமயமாக்க 56 கோடி ரூபாய் ஒதுக்கினார். அவரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், நிலக்கரி உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. 'பலகீனமான பிரிவு நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பொருளாதார வலிமைக்கு மிக முக்கியமான ஆதாரமாக இருக்கும்' என இந்திரா காந்தி கூறினார். இந்தப் பட்ஜெடில் 'வறுமை ஒழிப்புத் திட்டங்கள்' முன்மொழியப்பட்டது. சிறப்புத் திட்டங்கள் மற்றும் தன் விருப்பப்படி இடமாற்றம் ஆகிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1986 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் வி.பி.சிங் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் carrot and stick என்ற அணுகுமுறையை அவர் கடைபிடித்தார். அதாவது, வெகுமதி மற்றும் தண்டனை ஒருசேர இருக்குமாறு இந்த பட்ஜெட் இருந்தது. MODVAT எனப்படும் மாற்றியமைக்கப்பட்ட புதிய வரி முறையை அவர் அறிமுகப்படுத்தினார். நுகர்வோர் மீதான வரிச்சுமையை குறைப்பதுடன், கடத்தல்காரர்கள், கறுப்புபண முதலைகள், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதற்கான திட்டங்களை கொண்டுவந்தார்.

1991-92 ஆம் ஆண்டு பட்ஜெட் நிதியமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட மிகச்சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை மாற்றிமைக்கும் வகையில் இருந்தது. தாராளமயமாக்கலின் தொடக்கமாக அமைந்த இந்த பட்ஜெட், ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையை மாற்றியமைத்தது. புதிய பட்ஜெட்டால் இந்திய நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடும் சூழலையும் உருவாக்கிக்கொடுத்தது.

1997 ஆம் ஆண்டு நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது கனவு பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரிகளை பெருமளவு குறைத்தார். தனிநபர் வருமான வரி விகிதத்தை 40 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக குறைத்தார். மேலும், சில அடிப்படை கட்டணங்களையும் ரத்து செய்தார். வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் வரி வசூலில் மாற்றங்களை கொண்டுவந்தார்.

நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவால் தாக்கல் செய்யப்பட்ட 2000-2001 ஆம் ஆண்டு பட்ஜெட் மில்லினியம் பட்ஜெட் என அழைக்கப்படுகிறது .ஏனென்றால், இந்த பட்ஜெட் இந்தியாவை ஒரு மென்பொருள் மேம்பாட்டு மையமாக்க ஊக்குவித்தது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் உலகளாவிய வரைபடத்தில் மென்பொருள் ஏற்றுமதியாளராக இந்தியா இடம்பெறுவதற்கு இந்த பட்ஜெட் காரணமாக அமைந்தது.

2014ஆம் ஆண்டு முதன் முறையாகப் பிப்ரவரி இறுதியில் நடத்தப்பட்டு வந்த பட்ஜெட் தாக்கலினை மோடி தலைமையிலான அரசு மாற்றிப் பிப்ரவரி 1 தேதியே தாக்கல் செய்தது. முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் தான் ஏப்ரல் மாதம் முதல் பொது நலதிட்டப்பணிகள் நடைபெறும் என்றும் ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாகப் பயனர்களைச் சென்றடையும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் 100 வருடம் தனியாக இருந்த ரயில்வே பட்ஜெட் நீக்கப்பட்டுப் பொதுப் பட்ஜெட் ஆக ஒன்றிணைக்கப்பட்டது.

நாட்டின் 2வது பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலனி ஆதிக்கம் நிறைந்த காலத்தில் இருந்து ப்ரீப்கேஸில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில் அதனை ஒழித்து முதன்முறையாக பாஹி கட்டாவை அறிமுகப்படுத்தினார். பிப்ரவரி 1 ஆம் தேதி 2021 -22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு காகிதமில்லாத பட்ஜெட் ஆக தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+