பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ வர்த்தகத்திற்கு செக்.. இனி 30% விர்ச்சுவல் வரி..! - நிர்மலா சீதாராமன்
டெல்லி: இந்தியா பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ வர்த்தகத்திற்கு விர்ச்சுவல் வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு க்ரிப்டோ கரன்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த க்ரிப்டோ வர்த்தகம் இதுவரை இந்தியாவில் ஒழுங்குபடுத்தப்படவில்லை.
க்ரிப்டோ கரன்சி வர்த்தகம் முறைப்படுத்தப்படாத காரணத்தால் பல மசோடிகள் இதில் நடந்து கொண்டு இருக்கின்றன. முக்கியமாக இவ்வளவு முதலீடு செய்யுங்கள் இத்தனை மடங்கு லாபம் வெறும் என்றெல்லாம் பொய்யான விளம்பரம் கொடுத்து பல மோசடிகள் நாடு முழுக்க நடந்து வருகிறது.

கிரிப்டோ கரன்சி
உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காயின்ஸ், டோக்கன்ஸ், அதற்கான வர்த்தகம் என்று கிரிப்டோ கரன்ஸி உலகமே தனி. . தற்போது உலகம் முழுக்க 3500க்கும் அதிகமான கிரிப்டோ கரன்சிகள் உள்ளன. இதில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் டாலரை விட அதிக மதிப்பு கொண்டதாக உள்ளது. ஆனால் இதற்கு இந்தியாவில் இதுவரை வரி இல்லை.

வரி இல்லாத சொர்க்கம்
ஆம் கிரிப்டோ கரன்சி வருவாய் எவ்வளவு வந்தாலும் அதற்கு வரி இல்லை என்ற நிலையே இருந்தது. இதனால் பணம் பதுக்கும் நபர்களுக்கு இது வரி இல்லாத சொர்க்கமாக இருந்தது. அதாவது தங்கள் கருப்பு பணத்தை இதில் முதலீடு செய்வது. அங்கு தொடர்ந்து லாபம் கிடைக்கும். இந்த லாபத்திற்கு கொஞ்சம் கூட வரி காட்டாத நிலை ஏற்பட்டது. அதேபோல் என்எப்டி போன்ற வர்த்தகத்தில் ஓவியங்களை விற்பனை செய்து பலர் பல கோடிகளை வரி கட்டமால் லாபம் பார்க்கும் சம்பவங்களும் நடந்தன.

மசோதா வரவில்லை
இந்த நிலையில்தான் கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்கப்படுத்த மசோதா கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் அப்பித்து மசோதா கொண்டு வரப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது இந்தியா பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ வர்த்தகத்திற்கு விர்ச்சுவல் வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் க்ரிப்டோ வர்த்தக வருவாய்க்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு
இதன் காரணமாக என்எப்டி போன்ற டிஜிட்டல் வர்த்தகத்திற்கும் 30 சதவிகித வரி விதிக்கப்படும். அதாவது டிஜிட்டல் க்ரிப்டோ உலகில் நீங்கள் விற்பனை செய்யும் க்ரிப்டோகரன்சிக்கு இனி வரி கட்ட வேண்டும். அதேபோல் க்ரிப்டோ உலகில் உங்களுக்கு வர கூடிய லாபத்திற்கும் 30 சதவிகித வரி கட்ட வேண்டும். புதிதாக க்ரிப்டோ வாங்கும் போது வரி கட்ட தேவையில்லை. மாறாக இதை விற்பனை செய்யும் சமயங்களிலும், அதன் மதிப்பு உயரும் போதும் லாபத்தில் 30 சதவிகிதம் வரி கட்ட வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications