பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்.. இந்திய விமானப் படைக்கு அதிக நிதி ஒதுக்கீடு!
டெல்லி: பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் இந்திய விமானப் படைக்கு ரூ 5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முப்படைகளில் இந்திய விமான படைக்குத்தான் அதிக நிதி.
2022-2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 4ஆவது முறையாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட், இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் உரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்திய கடற்படையை நவீனமயமாக்க 43 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விமான படைக்கு எவ்வளவு
அது போல் இந்திய விமான படைக்கு ரூ 56,851 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது 4.5 சதவீதம் அதிகமாகும். ஆனால் இந்திய ராணுவத்திற்கு ரூ 32,102 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். கடந்த நிதியாண்டில் ரூ 36,481.90 கோடி ஒதுக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு ரூ 47,590 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 43 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு ரூ 33,253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

5.25 லட்சம் கோடி
ஒட்டுமொத்தமாக பாதுகாப்புத் துறைக்கென பட்ஜெட் நிதி ரூ 5.25 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ 4.78 லட்சம் கோடியாக இருந்த பட்ஜெட் நிதியை விட ரூ 46,970 கோடி அதிகமாகும். அதாவது 9.82 சதவீதம் அதிகம். இதில் ஆயுத படைகளுக்கான ஓய்வூதிய தொகை ரூ 1.19 லட்சம் கோடியும் அடங்கும். இந்த தொகை கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

12 சதவீதம் அதிகம்
இந்த ரூ 5.25 லட்சத்தில் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள், போர் கப்பல்கள், இதர ராணுவ தளவாடங்கள் வாங்க 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் 1.35 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஊழியர்களின் ஊதியம், பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்காக 2.33 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறைகளின் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25% நிதி பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
Recommended Video

மேம்பாட்டு பிரிவு
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68% ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதிகள் குறைக்கப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications