டெல்லி: தனிநபர் வருமான வரம்பு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரையாற்றினர். இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்:
Feb 01, 2024, 1:25 pm IST
ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்காக ரூ1 லட்சம் கோடி நிதி உதவி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது; இளைய இந்தியாவின் இளைஞர்களின் எண்ணங்களை பிரதிபதிலிக்கும் பட்ஜெட் இது- பிரதமர் மோடி
Feb 01, 2024, 1:23 pm IST
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மேம்பாட்டுக்கான பட்ஜெட் இது. இந்தியாவை 2047-ல் வளர்ந்தா நாடாகா மாற்றுவதற்கான உறுதியை தரும் பட்ஜெட் இது- பிரதமர் மோடி
Feb 01, 2024, 1:20 pm IST
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
Feb 01, 2024, 1:18 pm IST
கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
ஒரு சிறு திருத்தம்.
15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்.- சு.வெங்கடேசன் எம்பி
கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்த கருத்து தெரிவிக்கிறார் பிரதமர் மோடி
Feb 01, 2024, 12:08 pm IST
லோக்சபா நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணி வரை ஒத்திவைப்பு
Feb 01, 2024, 12:08 pm IST
லோக்சபாவில் மத்திய இடைக்கால பட்ஜெட் நிறைவேறியது
Feb 01, 2024, 12:03 pm IST
துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை
உள்நாட்டு சுற்றுலாவில் கவனம் செலுத்தப்படும், இது சுற்றுலா சார்ந்த வர்த்தகர்களுக்கு ஊக்கமளிக்கும்- நிர்மலா சீதாராமன்
Feb 01, 2024, 12:02 pm IST
58 நிமிடங்களில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை வாசித்து முடித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Feb 01, 2024, 11:56 am IST
தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அறிவிப்பு
Feb 01, 2024, 11:54 am IST
ரூ11.75 லட்ச கோடி கடன் வாங்குவதற்கு திட்டம்
மாதம் ஜிஎஸ்டி சராசரி வசூல் ரூ 1.66 லட்சம் கோடி
Feb 01, 2024, 11:54 am IST
வருமான வரி உச்சவரம்பு ரூ2.5 லட்சத்தில் இருந்து ரூ7 லட்சமாக அதிகரிக்கப்பட்டது
Feb 01, 2024, 11:53 am IST
நாட்டின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடிக்கும் அதிகம்
- நிர்மலா சீதாராமன்
Feb 01, 2024, 11:50 am IST
நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.8% ஆக இருக்கும்- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Feb 01, 2024, 11:49 am IST
மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடனாக ரூ1.3 லட்சம் கோடி வழங்கப்படும்
Feb 01, 2024, 11:48 am IST
சுற்றுலா மேம்பாட்டுக்காக மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்படும்
Feb 01, 2024, 11:46 am IST
மின்சார வாகனங்கள் உற்பத்தி, பயன்பாடு ஊக்குவிக்கப்படும்
Feb 01, 2024, 11:45 am IST
இந்திய விமான நிறுவனங்கள் 1,000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய உள்ளன
Feb 01, 2024, 11:45 am IST
லட்சத்தீவில் சுற்றுலே மாம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
Feb 01, 2024, 11:43 am IST
பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்துக்கு முன்னுரிமை
3 பிரதான ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்படும்
40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்
Feb 01, 2024, 11:40 am IST
நாட்டின் விமான நிலையங்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும். புதிய சாலை, ரயில் திட்டங்களுக்கான 3 முக்கிய வழித்தடங்கள் அமைக்கப்படும்.
Feb 01, 2024, 11:38 am IST
விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்
Feb 01, 2024, 11:38 am IST
புதிய வந்தே பாரத் ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Feb 01, 2024, 11:37 am IST
3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்
தொழில் தொடங்க வட்டியில்லான கட ந்வழங்க ரூ1 லட்சம் கோடியில் நிதியம் தொடங்கப்படும்
For the youth, FM Sitharaman says, "For our tech-savvy youth, this will be a golden era. A corpus of Rs 1 lakh crore will be established with 50-year interest-free loan provided. It will be for long-term financing or re-financing with low or nil interest rates." pic.twitter.com/Yw9o7B3yoU
1 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்பட்டு வருகின்றனர்
5 ஒருங்கிணைந்த அக்வா பூங்காக்கள் அமைக்கப்படும்
9 கோடி பெண்களை உள்ளடக்கிய 83 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன
-நிர்மலா சீதாராமன்
Feb 01, 2024, 11:34 am IST
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது; பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்
READ MORE
5:19 PM, 30 Jan
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டதால் மத்திய பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள் இருக்காது; எனினும் தேர்தலை கருத்தில் கொண்டு நிதி உதவி திட்டங்களில் முக்கிய அறிவிப்புகள், மாற்றங்கள் இருக்கலாம் என்பது எதிர்பார்ப்பு.
5:19 PM, 30 Jan
ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
5:20 PM, 30 Jan
நாடாளுமன்ற கூட்டத் தொடர் புதன்கிழமையன்று கூடுகிறது. 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறும்.
10:37 AM, 31 Jan
நாட்டில் பெண் சக்திகளின் திருவிழா நடைபெறுகிறது; நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்; ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தும் வகையில் இருக்க கூடாது. நாடாளுமன்ற விவாதங்கள் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்- எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
#WATCH | "We are going to follow the tradition of presenting a full budget after the new government is formed," says PM Modi at the beginning of the interim Budget session of Parliament. pic.twitter.com/liw03YEgeQ
நாடாளுமன்றத்துக்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை- ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது
#WATCH | President Droupadi Murmu departs from Rashtrapati Bhavan for the Parliament building.
The Budget Session will begin with her address to the joint sitting of both Houses. This will be her first address in the new Parliament building. pic.twitter.com/I5KmoSRcKV
நாடாளுமன்றம் வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை; துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி வரவேற்றனர்
11:01 AM, 31 Jan
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது;
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடக்கம்; ஜனாதிபதி திரவுபதி முர்முவை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா வரவேற்றார்.
11:04 AM, 31 Jan
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையை தொடங்கினார்
11:07 AM, 31 Jan
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எனது முதல் உரை. அமிர்த பெருவிழாவை வளர்ந்த பாரதம் நிர்ணயம் செய்யும்- ஜனாதிபதி திரவுபதி முர்மு
#WATCH | Budget Session | President Droupadi Murmu addresses a joint session of both Houses at the new Parliament building.
She says, "...This is my first address in the new Parliament building. This grand building has been built at the beginning of the Amrit Kaal. This has the… pic.twitter.com/wKMzMihnos
எனது தேசம் எனது மண் யாத்திரை மூலம் பல கிராமங்களில் புனித மண் எடுக்கப்பட்டது; இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிர்சா முண்டாவின் தினம் பழங்குடியினரின் கவுரவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது; செயற்கை கோள்களை வானில் ஏவி வெற்றி படைத்துள்ளோம்- ஜனாதிபதி திரவு முர்மு
11:09 AM, 31 Jan
நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறையாக ஜனாதிபதிக்கு செங்கோல் ஏந்தி வரவேற்பளிக்கப்பட்டது
#WATCH | Budget Session | President Droupadi Murmu arrives at the Parliament for her address to the joint session of both Houses. Sengol carried and installed in her presence. pic.twitter.com/vhWm2oHj6J
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் தொடங்கப்பட்டது; நிலவின் தென் துருவம் அருகே பாரதத்தின் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:11 AM, 31 Jan
மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது; சட்டசபை, நாடாளுமன்றத்தில் இனி பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:12 AM, 31 Jan
நீதித்துறை சட்டங்கள் புதியதாக நமக்கு கிடைத்துள்ளன; லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இடஒதுக்கீடு முறை அமலாகிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:14 AM, 31 Jan
ஜனாதிபதி உரையின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் திடீர் கூச்சல்
11:16 AM, 31 Jan
அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:17 AM, 31 Jan
நாட்டு மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்; வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை கொண்டது 2023-ம் ஆண்டு. சீர்திருத்தம், செயல்பாடுகளில் மத்திய அரசு உறுதியாக உள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:18 AM, 31 Jan
டிஜிட்டல் துறையில் இந்தியா அளப்பரிய சாதனைகளைப் படைத்து கொண்டிருக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:19 AM, 31 Jan
10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலைமையை எட்டியுள்ளோம். கதர், கிராம பொருட்கள் விற்பனை 4 மடங்கு அதிகரித்துள்ளது- ஜனாதிபதி திரவு முர்மு
#WATCH | President Droupadi Murmu enlists the achievements of the government
"The last year was full of accomplishments for India. There were many successes - India became the fastest-growing economy. India became the first nation to reach the south pole of the Moon. The… pic.twitter.com/5xYwQY2c7w
ஜிஎஸ்டி வரி மூலம் ஒரே நாடு, ஒரே சட்டம் உருவாகிவிட்டது; நாட்டின் சராமரி ஜிஎஸ்டி வருவாய் ரூ1.40 லட்சம் கோடியாக உள்ளது. வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரிப்பு- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:22 AM, 31 Jan
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் குறித்து ஜனாதிபதி திரவுதிபதி முர்மு தமது உரையில் சுட்டிக்காட்டினார்
11:23 AM, 31 Jan
செல்போன் தயாரிப்பில் உலகின் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது; அன்னிய செலாவணி கையிருப்பு 600 கோடி டாலராக உள்ளது. பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ1 லட்சம் கோடியாக அதிகரிப்பு- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:23 AM, 31 Jan
உ.பி, தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விண்வெளி துறையில் புதிய நிறுவனங்கள் கால் பதிக்கின்றன. நல்ல நிர்வாகத்தை வழங்குதலே மத்திய அரசின் முன்னுரிமை
11:26 AM, 31 Jan
அன்னிய நேரடி முதலீடு 3 மடங்கு அதிகரிப்பு; தொழில்துறைகள் மிகப் பெரும் வளர்ச்சியடைந்துள்ளன. டிஜிட்டல் மேலாண்மை துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
11:29 AM, 31 Jan
இந்திய அரசை பின்பற்றி பிற நாடுகளும் யுபிஐ பணவர்த்தனை பின்பற்றப்பட்டு வருகிறது. சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதைகள் அமைபதில் மிகப் பெரும் வளர்ச்சி அடைந்துவிட்டோம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு
#WATCH | Budget Session | President Droupadi Murmu addresses a joint session of both Houses at the new Parliament building.
She says, "The achievements that we see today are the extension of the practices of the last 10 years. We heard the slogan of 'Gareebi Hatao' since our… pic.twitter.com/ZBZYDPsekk
விமான நிலையங்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது; 4 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன
11:32 AM, 31 Jan
நெடுஞ்சாலைகளின் தூரம் இரண்டரை மடங்கு அதிகரிப்பு; விமான நிலையங்கள் எண்ணிக்கையும் இரண்டரை மடங்கு அதிகம். இலவச உணவு தானியங்கள் வழங்க ரூ11 லட்சம் கோடி செலவிடப்படும் -ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:33 AM, 31 Jan
விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; 4 லட்சம் குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் எனும் வீடுகளுக்கு குடிநீர் வழங்க ரூ4 லட்சம் கோடி செலவிட்டுள்ளோம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:33 AM, 31 Jan
உஜ்வாலா திட்டம் ,ஆயுஷ்மான் திட்டங்களின் நன்மைகள், பயனாளிகள் விவரங்களையும் பட்டியலிட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
11:36 AM, 31 Jan
விலைவாசி உயர்வு ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது. அரசின் பயன்கள் அனைவருக்கும் சென்றடைவதே இலக்கு. செமி அதிவேக ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன- ஜனாதிபதி திரவுபதி முர்மு
Union Budget 2024 (மத்திய பட்ஜெட்) LIVE News Updates and Summary Highlights in Tamil: Check Out the Latest News on Union Budget Presented by Finance Minister Nirmala Sitharaman on February 1. Even though it's an interim budget, many industries such as tourism, auto, FMCG, fintech, real estate, etc., are anticipating significant announcements. Stay updated on Budget 2024 expectations and expert insights on Oneindia Tamil.