Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ஜெட் அல்வா தயாரிப்பு: ஓபிசி எங்கே? ராகுல் காந்தி கேள்வி! தலையில் அடித்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டின் பட்ஜெட்டை 20,30 பேர் இணைந்து தயாரிக்கின்றனர்; பட்ஜெட் அல்வா தயாரிப்பில் கூட ஓபிசிக்கள், தலித் , பழங்குடி அதிகாரிகள் இல்லை; பட்ஜெட் அல்வாவும் கூட நாட்டின் 73% மக்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது என லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிரித்தபடியே இரு கைகளால் தலையில் அடித்துக் கொண்ட படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். ஒரு கட்டத்தில் பட்ஜெட்டுக்கு முன்னர் அல்வா தயாரிக்கப்படும் போட்டோவை லோக்சபாவில் காட்டினார் ராகுல் காந்தி. இந்த படத்தில் நிதி அமைச்சர் அல்வா தருகிறார். இந்த அல்வா தயாரிப்பில் கூட சிலர்தான் ஓபிசி அதிகாரிகள். தலித், பழங்குடிகள் யாருமே இல்லை.

budget 2024 rahul gandhi 2024

தலையில் அடித்துக் கொண்ட நிர்மலா சீதாராமன்: இதேபோலதான் மத்திய பட்ஜெட் என்கிற அல்வாவும் 73% மக்களுக்குக் கிடைக்கவில்லை. வெறும் 3% பேருக்குதான் பட்ஜெட் அல்வா கிடைத்திருக்கிறது என்றார். அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு கைகளால் தலையில் அடித்துக் கொண்டார். இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அல்வா அல்லது பட்ஜெட் தயாரிப்பில் இதே முறைதானே பின்பற்றப்பட்டது என்று பாஜகவினரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

அகிம்சையும் சிவபெருமானும்: மேலும், லோக்சபாவில் கடைசியாக பேசும் போது சிவ பெருமானின் அகிம்சையின் கருத்து, திரிசூலம் கையில் பிடிக்கப்படாமல் அவரது முதுகுக்குப் பின்னால் வைக்கப்பட்டு, இருப்பது, மற்றும் சிவ பெருமானின் கழுத்தில் இரு க்கும் பாம்பு பற்றி நான் பேசினேன்,

budget 2024 rahul gandhi 2024

நம் நாட்டில் உள்ள அனைத்து மதங்களும் அகிம்சையின் கருத்தை எவ்வாறு முன்வைக்கின்றன என்பதையும், "பயப்படாதே, பயமுறுத்தாதே" என்ற சொற்றொடரில் எவ்வாறு இணைக்க முடியும் என்பதையும் சொன்னேன். அபய் முத்ராவின் தனிப்பட்ட கருத்துக்கு அப்பாற்பட்ட ஒரு யோசனை உள்ளது என்றும், அது அன்பு மற்றும் அஹிம்சையின் கருத்தை மற்ற அனைவருக்கும் கடத்துகிறது என்றும் நான் கூறினேன்.

நாடு முழுவதும் அச்சம்: இந்தியாவில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது, அந்த அச்சம் நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பரவியுள்ளது. பிரச்சனை என்னவென்றால், பா.ஜ.க.வில் ஒருவருக்கு மட்டுமே பிரதமர் கனவு காண அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் பிரதமராக வேண்டும் என முடிவெடுத்தால், பெரிய பிரச்சனை; பயம் இருக்கிறது. இந்த அச்சம் நாடு முழுவதும் பரவியுள்ளது, நான் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன், இந்த பயம் ஏன் இவ்வளவு ஆழமாக பரவுகிறது? பா.ஜ.க.வில் உள்ள என் நண்பர்கள் ஏன் பயமுறுத்தப்படுகிறார்கள்? அமைச்சர்கள் பயப்படுகிறார்கள், விவசாயிகள் பயப்படுகிறார்கள், தொழிலாளர்கள் பயப்படுகிறார்கள்? ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.

budget 2024 rahul gandhi 2024

சக்கர வியூகம்: அத்துடன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அபிமன்யு, 6 பேர் அமைத்த சக்ரவியூகத்தால் கொல்லப்பட்டார். சக்ரவியூகத்தின் மற்றொரு பெயர் பத்மவியூகம். இது தாமரை மலரின் வடிவத்தில் உள்ளது. அதற்குள் பயமும், வன்முறையும் இருக்கிறது. அபிமன்யூவிற்கு என்ன நடந்ததோ அதுபோல, 21ஆம் நூற்றாண்டில் மற்றொரு சக்கரவியூகம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அபிமன்யுவை சக்கரவியூகத்தில் 6 பேர் கொன்றனர். இன்றும் சக்கரவியூகத்தின் நடுவில் 6 பேர் உள்ளனர். அந்த 6 பேர் - நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அதானி மற்றும் அம்பானி என்றார் ராகுல் காந்தி. ஆனால் அஜித் தோவல், அதானி மற்றும் அம்பானி பெயர்களை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+