ஞாயிற்றுக்கிழமையில் மத்திய பட்ஜெட்.. ஜனவரி 28 முதல் ஏப்ரல் 2 வரை 2 அமர்வுகளாக கூடும் நாடாளுமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ கூறியுள்ளார். 2026-2027 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை கிரண் ரிஜூஜூ கூறுகையில், ‛‛இந்திய அரசின் பரிந்துரையின் பேரில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Parliament Budget

இந்த கூட்டத்தொடர் 2026ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி தொடங்கி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டு அமர்வுகளாக கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முதல் அமர்வு பிப்ரவரி 13ம் தேதி முடிவடைகிறது. பின்னர் நாடாளுமன்றம் மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது. இது அர்த்தமுள்ள விவாதம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி மற்றும் விவாதத்துக்கான ஒரு முக்கிய படியாகும்.'' என்று கூறியுள்ளார்.

எப்போதும் நம் நாட்டில் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தான் தொடங்கும். அந்த வகையில் ஜனவரி 28 ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுவார். அதன்பிறகு ஜனவரி 29ம் தேதி பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் தாக்கல் செய்வார்.

அதன்பிறகு தான் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும். இந்த முறை பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நம் நாட்டை எடுத்து கொண்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடுவதுஅரிதான விஷயமாகும்.

இதற்கு முன்பு கடந்த 2012ம் ஆண்டின் மே மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி அன்று சபை கூடியது. அதன்பிறகு 2020ம் ஆண்டில் கோவிட் -19 பரவல் சமயத்தில் சிறப்பு நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமையில் கூடியது. அதன்பிறகு பிப்ரவரி 1ம் தேதியான பட்ஜெட் தேதியை மாற்ற விரும்பாமல் நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமையில் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+