Budget 2026: நாட்டின் பொருளாதர வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டங்கள்.. பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: 2026-2027 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டங்களை முன்மொழிந்துள்ளார். இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது பொருளாதர வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்ச திட்டங்களை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். அதன் விவரம் வருமாறு:-

* ஏழு முக்கிய மற்றும் முன்னோடி துறைகளில் உற்பத்தியை பெருமளவில் விரிவுபடுத்துதல்
* பாரம்பரிய தொழில்துறைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படும்.
* முன்னணி MSME (சிறு, குறு, நடுத்தர) நிறுவனங்களை உருவாக்குதல்
* உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வலுவான ஊக்கத்தை வழங்குதல்
* நீண்டகால பாதுகாப்பும் நிலைத்தன்மையும் உறுதி செய்தல்
* நகர மைய பொருளாதாரப் பகுதிகளை மேம்படுத்துதல்
ஆகிய 6 திட்டங்களை நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார்.
நிர்மலா சீதாரமன் தனது பட்ஜெட் உரையில் பேசியதாவது:- புதிய தொழில் நுட்பத்தால் உற்பத்தி துறையில் பெரும் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அரசின் கொள்கையாகும். சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் நாட்டின் வளங்களை பெறுவது அரசின் லட்சியங்களில் ஒன்றாகும். புதிய தொழில் நுட்பத்தால் உற்பத்தி துறையில் பெருவளர்ச்சி உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.
உயிரி மருத்துவ திட்டத்தை ஊக்குவிக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எலக்ட்ரானிக்ஸ் துறையை ஊக்குவிக்க 40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும். கடலோர போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications