முக்கியமான அறிவிப்பு இல்லை.. பட்ஜெட்டில் பெரிய மவுனம்! 2027க்கு சர்ப்ரைஸ் வைத்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: தமிழ்நாடு, கேரளா என 5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த பட்ஜெட்டில் 5 மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து பொருளாதார நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
என்னதான் இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் நடைபெற்றாலும், அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜகவின் புல் போக்கசும் அந்த மாநிலத்தை தான் குறி வைத்து இருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலில் இந்த மாநிலம், பாஜகவை கடுமையாக காலை வாரிவிட்டது. எந்த ராமர் கோயிலை காட்டி, தனது இந்துத்துவா வாக்கு வங்கியை பாஜக உயர்த்த திட்டமிட்டிருந்ததோ, அந்த கோயில் அமைந்திருந்த அயோத்தி தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்தது. எனவே எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டில் எந்த முக்கியமான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
"Ammunitions saved for 2027, Uttar Pradesh" என்று இந்த பட்ஜெட் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது தேர்தலை வெல்வதற்காக கையில் வைத்திருக்கும் நிதி மற்றும் மக்கள் நல திட்டங்களை ஆங்கிலத்தில் 'Ammunitions' என்று சொல்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில், அனைத்து சலுகைகளும் வழங்கி விடாமல், அடுத்த ஆண்டில் வரவிருக்கும் உத்தரபிரதேச தேர்தலுக்கு முன்னதாக.. சில மெகா திட்டங்களையும் வரி சலுகைகளையும் மத்திய அரசு சேமித்து வைத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உத்தரபிரதேசத்திற்கு இந்த பட்ஜெட்டில் வரி பகிர்வு மூலம் சுமார் ரூ.2.80 லட்சம் கோடி வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே நடந்து வரும் எக்ஸ்பிரஸ்வே மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களை முடிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பிரமாண்டமான அறிவிப்புகளை 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள டிபன்ஸ் காரிடார் மற்றும் சிறு தொழில்களுக்கு (MSME) இந்த பட்ஜெட்டில் நல்ல ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது அந்த மாநிலத்தின் வேலைவாய்ப்பை அதிகரித்து, 2027 தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஒரு வலுவான பிரச்சார ஆயுதமாக அமையும்.
அதேபோல இந்த பட்ஜெட், ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. ஆனால், தேர்தல் நெருங்கும்போது ஜனரஞ்சக திட்டங்கள் அதாவது மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டங்கள் அல்லது கூடுதல் மானியங்களை கொடுக்கும் அந்த பெரிய திட்டங்களுக்கான நிதியை கொடுக்க,அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications