நாடு முழுக்க வரும் புல்லட் ரயில்? மத்திய அரசின் மாஸ் பிளான்.. விரைவில் தொடங்க இருக்கும் நடவடிக்கை
டெல்லி: பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்தை நாடு முழுக்க கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது. தற்போது மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த புல்லட் ரயில் சேவையை 2026-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழித்தட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை - அகமதாபத் இடையேயான 508 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 2 மணி நேரம் 7 நிமிடத்தில் செல்லும் வகையில் இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சூரத், வதோதரா, அகமதாபாத் உள்ளிட்ட சில ஸ்டேஷன்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும் வகையில் திட்டம் தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், முழு நடைபாதையும் முடிவடையும் தேதி இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும் குஜராத் வழியாக 352 கிமீ பகுதியில் 50 கிமீ பகுதியைத் முதல்கட்டமாக 2026-ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2027 இல் முழுமையாக திறக்கப்படும் என சொல்லப்படுகிறது. மும்பை- அகமதாபாத் மட்டும் இன்றி பல்வேறு வழித்தடங்களிலும் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்தான் இன்று ஜனாதிபதி உரையிலும் இது தொடர்பான அறிவிப்பு இடம் பெற்று இருந்தது.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:- நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளிலும் புல்லட் ரயிலுக்கான பாதை அமைக்க சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் வழித்தடம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என்றார்.
மும்பை- அகமதாபாத் மட்டும் இன்றி சென்னை, பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லெட் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. அதாவது, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 நிலையங்கள் வழியாக புல்லெட் ரயில் இயக்கப்படும் என தகவல் வெளியானது. சென்னை - மைசூர் அதிவேக ரயில் (CBM புல்லட் ரயில்) திட்டம் 435 கிமீ தூரம் செல்லும் உத்தேச அதிவேக ரயில் பாதை.
இதில் தொடக்க ஸ்டேஷன் சென்ட்ரல் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜா முத்தையா ரோடு - சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே இந்த புல்லட் ரயில் நிலையம் அமைக்கப்படும். இது முழுக்க முழுக்க அண்டர் கிரவுண்ட் முறையில் சென்னையில் அமைக்கப்படும். சென்னைக்கு வெளியே செல்ல செல்ல இது வெளியே வரும்.
சென்ட்ரல் ஏற்கனவே மெட்ரோ, பேருந்து நிலையம், ரயில் நிலையத்தை கொண்டு இருப்பதால் புல்லட் ரயில் வரும் பட்சத்தில் அந்த பகுதியே மாற்றம் அடையும், சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications