உங்களுக்கு லப் டப்புன்னுதான் கேட்குதா? விண்வெளியில் இருந்து வந்த "விசித்திர" அலை.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: தொலைதூர விண்மீன் மண்டலத்தில் இருந்து இதய துடிப்பு போன்று ரேடியோ அலை சிக்னல்கள் வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது விண்வெளி பேரண்டத்தின் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்த போது இந்தப் பிரபஞ்சம் உருவானது. பிரபஞ்சம் குறித்த ஆய்வில் மனித குலம் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் மனிதன் எட்டியுள்ளான்.

நிலவில் காலடி எடுத்து வைத்தது முதல், செவ்வாய் கிரகத்தில் இருந்து மண் எடுத்து வந்தது வரை எல்லாமே பிரபஞ்சம் மற்றும் பூமிக்கு அப்பால் உள்ள கோள்களில் என்ன இருக்கிறது என்பதை கண்டறியும் மனிதனின் ஆவல்தான் மூலதனம்.

 தொடர் மர்மம்

தொடர் மர்மம்

பிரபஞ்சம் குறித்த ஆய்வு ஒவ்வொன்றும் பல மர்மங்களை கிளப்புவதாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் பிரபஞ்சத்தின் தொலை தூர பகுதியில் இருந்து தொடர்ச்சியாக கிடைத்த ரேடியோ மின் அலைகள் விஞ்ஞானிகளுக்கு பல சந்தேகங்களை எழுப்பியது. பூமியிலிருந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் இருந்து சிக்னல்கள் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. சிக்னல்கள் எங்கிருந்து வருகிறது?. எப்படி ஏற்பட்டது? என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

 நூற்றுக்கணக்கான சிக்னல்கள்

நூற்றுக்கணக்கான சிக்னல்கள்

ஒரு மிகப் பெரிய விண்மீன் ஈர்ப்பு சக்தியால் உருவான வீழ்ச்சியால் வெடிப்புக்கு உட்பட்டு மீதியாக உருவாகும் விண்மீன் வகையான நியூட்ரான் ஸ்டாரில் உள்ள காந்தப்புலத்தில் இருந்து இந்த சிக்னல்கள் வெளிப்படலாம் என்றும் விஞ்ஞானிகள் மத்தியில் சந்தேகம் எழாமல் இல்லை. கடந்த 2007-ம் ஆண்டு முதல் முறையாக இதேபோன்ற ரேடியா அலை சிக்னல்கள் பிரபஞ்ச வீதியில் கிடைத்தன. நூற்றுக்கணக்கான சிக்னல்கள் இதுவரை கிடைத்துள்ளது. இவை ஒரு நொடிக்கும் குறைவாக சில மில்லி செகண்டுகள் மட்டுமே நீடித்தன.

 0.2 வினாடிகளுக்கு ஒருமுறை

0.2 வினாடிகளுக்கு ஒருமுறை

ஆனால், தற்போது கிடைத்துள்ள ரேடியோ அலைகள் 3 நொடிகள் வரை நீடித்ததுள்ளது. முதலில் கிடைத்த சிக்னல்களை விட ஆயிரம் மடங்கு நீடித்ததாக உள்ளது. 0.2 வினாடிகளுக்கு ஒருமுறை தெளிவான காலமுறையுடன், 'லப்-டப்' எனும் இதய துடிப்பு போல ரேடியோ அலை சிக்னல்கள் கிடைத்துள்ளது. இந்த புதிய சமிக்ஞையானது ஸ்டெராய்டுகளின் காந்தம் அல்லது சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் ஒரு தரப்பினர் கருத்தாக உள்ளது.

 காந்த அலைகளாக இருக்கலாம்

காந்த அலைகளாக இருக்கலாம்


கால சமிக்ஞைகளை கண்டிப்பாக வெளியிடும் பல விஷயங்கள் பிரபஞ்சத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள மற்றொரு மூத்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி, நமது கேலக்ஸி மற்றும் அதன் காந்த அலைகள் குறித்தும் நமக்கு நன்றாக தெரியும். இந்த புதிய சமிக்ஞை ஸ்டெராய்டுகளில் ஒரு காந்த அலைகளாக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார். இந்த புதிய சிக்னல்கள் பிரபஞ்சம் குறித்த ஆய்வுக்கு மேலும் உதவும் எனவும் விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+