5 மாநில சட்டசபை தேர்தல் மட்டுமல்ல.. 6 மாநில இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலோடு மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இருகட்டங்களாக ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாள் இன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கோவாவில் ஏப். ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும், மகாராஷ்டிரா, குஜராத்தில் ஏப். 23 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவா - போன்டா
குஜராத் - அம்ரேத்
கர்நாடகா - பாகல்கோட், தாவநாகரி தெற்கு
மகாராஷ்டிரா - ராஹுரி, பாராமதி
நாகாலாந்து - கோரிடாங்க்
திரிபுராவில் - தர்மாநகர்
மே 4 ஆம் தேதி, 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையோடு, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications