முதல் பால் தூஸ்ரா.. அடுத்த அரை மணி நேரத்தில் பவுன்சரையே வீசிய மோடி.. நிலைகுலைந்த எதிர்க்கட்சிகள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, வெறும் 30 நிமிடத்தில் செய்த இரண்டு பெரிய சம்பவங்கள் நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. கிரிக்கெட்டில் பவுன்சரை வீசினால் எப்படி பேட்ஸ்மேன் நிலைகுலைந்து போவாரோ, அது போன்ற நிலை எதிர்க்கட்சிகளிடையே இப்போது ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களிடையே தோன்றிய உரையாற்றப் போவதாக செய்திகள் வெளியானது. இதனால் பணமதிப்பிழப்பாக இருக்குமோ அல்லது சிஏஏ சட்டம் அமலுக்கு வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாலை 5.30 மணி அளவில் டிவியில் தோன்றவில்லை.. மக்களிடையே உரையாற்றவும் இல்லை. மாறாக அவர் செய்தது கிரிக்கெட்டில் தூஸ்ரா பந்து வீச்சை போன்று ட்விஸ்ட் தரும் வகையில் இருந்தது.

சரி தூஸ்ரா என்பது என்ன.. கிரிக்கெட்டில் ஒரு ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சாளரின் ஒரு குறிப்பிட்ட வகை பந்து வீச்சு.. அதாவது பேட்ஸ்மேன் பந்து கீழே பட்டு, ஆப் ஸ்பின்னாகவே வரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்.. ஆனால் பந்து அப்படியே வராமல் அப்படியே எதிர்திசையில் சூழலும்.. அதாவது திடீரென நேராக வந்து நடு ஸ்டெம்பை பதம் பார்க்கும். இதை பேட்ஸ்மேனால் சரியாக கணிக்கவோ, கவனிக்கவோ முடியாது.. அப்படியான ஒரு பந்தை தான் இன்றைக்கு எதிர்க்கட்சிகளுக்கு 5.30 மணி அளவில் வீசினார் பிரதமர் மோடி..
அதாவது ராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகள் யாராவது ஒருவர் அக்னி 5 ஏவுகணை சோதனை குறித்து சொல்ல முடியும். இதை பிரதமர் நரேந்திர மோடியே அக்னி 5 ஏவுகணை சோதனை குறித்து நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இதை தான் அறிவித்தாரா.. நாங்கள் என்னமோ ஏதோ என்று நினைத்து விட்டோம் என்று எதிர்க்கட்சிகள் குழம்பி போயின. பொதுமக்களும், ஊடகங்களும் பரபரப்புக்கு ஆளாகினார்கள்.
ஆனால் அடுத்த அரைமணிநேரத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக பவுன்சரையே வீசினார் பிரதமர் மோடி.. கிரிக்கெட்டில் எப்படி சாதாரணமாக பந்து வீசிக்கொண்டிருக்கும் பவுலர், எப்படி நிலைகுலைய வைக்கும் அளவிற்கு பவுன்சரை வீசுவாரோ, அதுபோல் சிஏஏ என்ற பவுன்சரை சத்தமே இல்லாமல் வீசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.. குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதை கேட்டு எதிர்க்கட்சிகள் கடும் கோபம் அடைந்துள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட பதிவில், ரம்ஜான் மாதம் தொடங்குவதற்கு முந்தைய நாள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்திருப்பது ஏன் என நான் அறிவேன்.. மக்கள் அமைதி காக்க வேண்டும். வதந்திகளை நம்பக் கூடாது என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும் போது " இந்திய மக்கள் ஒருபோதும் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.. சிறுபான்மை மக்களை இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதற்கான தொடர் அச்சுறுத்தல்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் குடியுரிமைப் பெறலாம் என்பதற்கு எதிராக சிஏஏ சட்டம் உள்ளது. பிரித்தாலும் ஆர்.எஸ்.எஸின் கொள்கைகளை பாஜக அமல்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
இதனிடையே வடமாநிலங்களில் சிஏஏ சட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதற்கு எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications