அன்று தந்தை மாதவராவ் சிந்தியாவின் விமானப் போக்குவரத்து துறை இன்று மகன் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு!
டெல்லி: 30 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை மாதவராவ் சிந்தியா வகித்த விமானப் போக்குவரத்து துறை இலாகா இன்று மகன் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு முன்னதாக பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தில் பணியாற்றியவர் மாதவராவ் சிந்தியா. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ராஜீவ்காந்தி அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றினார் மாதவராவ் சிந்தியா.

மத்திய அமைச்சர் மாதவராவ்
1991-1993-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் மாதவராவ் சிந்தியா. ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து தமது பதவியை ராஜினாமா செய்தார் மாதவராவ் சிந்தியா.

காங். கலகக் குரல்
1996-ல் மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன்சிங்குடன் இணைந்து கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனிக்கட்சி நடத்தினார் மாதவராவ் சிந்தியா. 2001-ல் விமான விபத்தில் மாதவராவ் சிந்தியா மரணம் அடைந்தார். அவருக்குப் பின்னர் அவரது மகன் ஜோதிராதித்யா சிந்தியா தீவிர அரசியலில் இறங்கினார்.

மன்மோகன்சிங் அரசில் அமைச்சர்
ஜோதிராதித்யா சிந்தியாவின் அரசியல் பாதை என்பது தந்தை மாதவராவ் வாழ்க்கையை போலவே இருக்கிறது. மன்மோகன்சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் ஜோதிராதித்யா சிந்தியா. காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியையே கவிழ்த்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

தந்தை வகித்த அதே இலாகா
இதனையடுத்து பாஜக அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்தது. தற்போது மத்திய கேபினட் அமைச்சராக்கி உள்ளது. அதுவும் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது தந்தை வசம் இருந்த அதே விமானப் போக்குவரத்து துறை அமைச்சராகி இருக்கிறார் ஜோதிராதித்யா சிந்தியா. கொரோனா நெருக்கடிகளால் விமானப் போக்குவரத்து துறை மிக மோசமான இழப்பை சந்தித்திருக்கும் சவாலான தருணத்தில் இத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்கிறார் ஜோதிராதித்யா சிந்தியா.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications