துருக்கி, அஜர்பைஜான் உடன் இனி வர்த்தக உறவுகள் கிடையாது! வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தான் பக்கம் துருக்கியும், அஜர்பைஜானும் நின்றது. எனவே, இரு நாடுகளுடனான வர்த்த உறவுகளை துண்டித்துக் கொள்வதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் நேற்று தேசிய வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில், 125 க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில்தான் வர்த்தக முறிவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்தில், இந்திய வணிகர்கள் இனி இந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், இரு நாடுகளில் எந்த படத்தையும் தயாரிக்க வேண்டாம் என்று இந்திய திரைத்துறையினரை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி மீறி திரைப்படம் உருவாக்கப்பட்டால் அப்படத்தை பொதுமக்களும், வணிகர்களும் புறக்கணிப்பார்கள் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, விளம்பரங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் 24 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக நிற்கும் எந்தவொரு சக்தியையும் நாங்கள் தனிமைப்படுத்துவோம் என்று கூறியுள்ள வணிகர்கள், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் முழு ஆதரவளிப்போம் எனவும் கூறியுள்ளனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரவீன் கண்டேல்வால், "இந்தியாவின் ஆதரவால் பலனடைந்த துருக்கி மற்றும் அஜர்பைஜான், இப்போது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் பக்கம் நிற்பது துர்திஷ்டவசமானது. இந்த இரண்டு நாடுகளின் நிலைப்பாடு இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களின் மீதான நேரடித் தாக்குதலாகும். 140 கோடி இந்தியர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்" என்று கூறியுள்ளார்.
வணிகர்கள் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை மூலம் துருக்கி மற்றும் அஜர்பைஜான் தயாரிப்புகள் நாடு முழுவதும் புறக்கணிக்கப்படும். இந்திய வர்த்தகர்கள் இந்த நாடுகளின் பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள். அதேபோல அந்நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்ய மாட்டார்கள். இரண்டு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் இந்திய வணிகர்கள் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள மாட்டார்கள். அதேபோல இந்த நாடுகளை சுற்றுலா அல்லது வணிக தலங்களாக விளம்பரப்படுத்த மாட்டார்கள்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதற்கு துருக்கியின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சரி இது பாகிஸ்தான் மேற்கொண்ட தன்னிச்சையான முடிவு என்று வைத்துக்கொண்டாலும், கூட இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உடன் நிற்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்திருந்தது, அதன் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வந்தது. அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications