ஒரு கை பாப்போம் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்! 10 மாநிலங்கள் 95 தொகுதிகள்! இன்று ஓய்ந்த பிரசாரம்
டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்க இருக்கும் நிலையில் 10 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. பல ஸ்டார் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காணும் நிலையில் தேசிய அளவில் மூன்றாம் கட்ட தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. 18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏழு கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை இந்த வாக்குப்பதிவு திருவிழாவானது நடைபெறுகிறது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
3ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயக திருவிழா: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்போடு நடைபெற்று வரும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களை மக்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்க இருப்பதால் அவர்கள் பங்கு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இரு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் இன்னும் கட்ட தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது.
எங்கெங்கு தேர்தல்?: இந்நிலையில் குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் நாளை மறுநாள் 3 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களிலும், ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றன. இந்த நிலையில் குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கோவா, அசாம், ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வருகின்ற ஏழாம் தேதி அதாவது நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
வாக்குப் பதிவு: இதில் குஜராத்தில் ஒரே கட்டமாக 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் கோவா மாநிலத்தில் வடக்கு கோவா தெற்கு கோவா ஆகிய இரு தொகுதிகளிலுமே ஒரே கட்டமாக தேர்தல் ஆனது நடைபெற இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் பெற்று 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் இறந்ததால் தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இல்லாமல் தத்தார நகர் ஹவேலி, டையூ டாமன் யூனியன் பிரதேசங்களிலும் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
பிரசாரம் ஓய்ந்தது: இந்நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. முன்னதாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று உத்தர பிரதேசத்தில் வாக்கு சேகரித்தனர். மாலை ஆறு மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்பதால் தொகுதியில் வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைவரும் தொகுதியில் இருந்து வெளியேறி உள்ளனர்.
ஸ்டார் வேட்பாளர்கள்: இந்த தேர்தலில் பல முக்கிய ஸ்டார் வேட்பாளர்கள் களம் காண்பதால் தேசிய அளவில் இந்த தேர்தல் ஆனது கவனம் பெற்று இருக்கிறது. குஜராத்தில் காந்திநகர் பகுதியில் மதிய அமைச்சர் அமித் ஷா, ராஜ்கர் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், பாராமதி தொகுதியில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சூலே, மெயின்புரி தொகுதியில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி, கோவா தொகுதியில் பெரும் பணக்காரரான பல்லவி டெம்போ, உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் என பல ஸ்டார் வேட்பாளர்கள் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications