அதானி குழும கடன் விவரங்களை வெளியிட முடியாது.. நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்! காரணம் இதுதானாம்!
அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
டெல்லி: லோக்சபாவில் அதானி குழுமம் பெற்ற கடன் விவரங்கள் தொடர்பாக தீபக் பாய்ஜ் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள், தங்களது பங்குகளின் விலையை மிகைப்படுத்தி விற்பனை செய்து மிகப்பெரிய அளவில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளன என்று அறிக்கை வெளியானது. அதாவது அமெரிக்காவில் உள்ள பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் இந்த அறிக்கை வெளியிட்டது.

அதானி நிறுவனங்களின் மிதான இந்தகுற்றாச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேலாக சரிந்தது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அதானி குழுமம் அதிக அளவில் முதலீடுகளை பெற்றிருந்தது.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், கூட்டுக்குழு விசாரணை நடத்தவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. ஆனால், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதானி விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேரைக் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

இந்த நிலையில், லோக்சபாவில் அதானி குழுமம் பெற்ற கடன் விவரங்கள் தொடர்பாக தீபக் பாய்ஜ் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆர்பிஐ சட்டத்தின்படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications