1 நிமிஷம் இதை உற்று பாருங்க.. உங்க கண்ணுக்கு புலி தெரிகிறதா? அப்போ நீங்க கில்லாடி தான்!
டெல்லி: வனப்பகுதிக்குள் இரை தேடி செல்லும் வரிக்குதிரைகளுக்கு மத்தியில் புலி ஒன்று ஒளிந்திருப்பதை உங்களால் 10 நொடிக்குள் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை பாருங்கள். அப்படி கண்டுபிடித்தால் நீங்க புத்திசாலிதான்.
சமூக வலைத்தளங்களில் மக்களின் செயல்பாடுகாடுகள் அதிகரித்ததில் இருந்து எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் டிரெண்டிங் ஆகி நெட்டிசன்களுக்கு தீனி போட்டு கொண்டுதான் இருக்கும். குறிப்பாக வித்தியாசமான வீடியோக்கள், மனித நேயமிக்க செயல்கள் போன்றவை மட்டும் அல்லாது மூளைக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையிலான சில புதிர்களுக்கும் நெட்டிசன்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
நமது புத்திசாலித் தனத்தை எப்படியாவது முதல் ஆளாக நிரூபித்து காட்டிவிட வேண்டும் என புதிர்கள், இல்லூஷன் என சொல்லப்படும் ஒளி மாயைகள் உள்ளிட்ட பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

படத்தில் என்னதான் இருக்கு..
அந்த வகையில், வரிக்குதிரை கூட்டங்களுக்கு மத்தியில் அதை வேட்டையாட ஒரு வெள்ளை புலி மறைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருகின்றது. இந்த புகைப்படத்தில் வனப்பகுதி ஒன்றில் வரிக்குதிரை தனது இனங்களுடன் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றன. அடர்ந்த சமவெளிப்பகுதியான அவற்றில் தாவரங்களும் அதிகமாக உள்ளன. அதில், இரைதேடி செல்லும் வரிக்குதிரைகள் கூட்டமாக மெதுவாக நடந்து செல்கின்றன. இதில் ஒளிந்திருக்கும் புலி ஒன்றை 10 நொடிகளுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலிதான்.

முதல் டிப்ஸ்
வரிக்குதிரைக்கு மத்தியில் வெள்ளை புலி இருக்குது என்று சொன்னால் நம்ப முடியுதா.. நல்லா உற்று பாருங்க...அப்பவும் தெரியாதவர்களுக்கு தான் இந்த முதல் டிப்ஸ். இப்போது இந்த டிப்சை படிச்சிட்டு பாருங்க.... வெள்ளை மற்றும் கருப்பு நிறக்கோடுகளை கொண்ட வரிக்குதிரைகளுக்கு மத்தியில் பதுங்கி அதை வேட்டையாட இருக்கும் புலி வெள்ளை நிறம் கொண்டதாகும். மரபணு கோளாறு விளைவால் தனது இயல்பான நிறத்தை இழந்து வெள்ளை நிறத்தில் சில புலிகள் காணப்படுகின்றன. வெண்மை நிறத்தில் இருந்தாலும், புலிக்கு தென்படும் வழக்கமான கோடுகள் இருக்கும். இதனால், மஞ்சள் நிற புலியை எண்ணி அதில் தேடாதீங்க... உங்களால் கண்டுபிடிக்க முடியாது

டிப்ஸ் 2
பொதுவாக ஒரு படத்தில் இதுபோன்ற மறைந்து இருக்கும் உருவங்களை கண்டுபிடிக்க சொன்னால் நமது கண்கள் உடனே படத்தில் நடுப்பகுதியில் என்ன இருக்கிறது என்றே தேடத்தொடங்குவோம். இடது வலது புறத்தில் இருப்பதை அதிகமாக உற்று நோக்கி முதலில் தேடத்தொடங்கமாட்டோம். கொஞ்சம் புத்திசாலிகள் மட்டுமே படத்தின் ஒவ்வொரு மூலை மூடுக்கிலும் என்ன இருக்கிறது என்பதை துவக்கத்தில் இருந்தே தேடத்தொடங்குவர் (கோபிச்சிக்காதீங்க..) இதுதான் 2வது டிப்ஸ்.

புலி எங்க இருக்கு...
பதுங்கி இருந்து தனது நேரம் வரும் போது பாய்ந்து ஒரே கவ்வாக கவ்வி இரையை வேட்டையாடும் பழக்கம் கொண்டது புலி. அவ்வளவு எளிதாக கூட்டத்தோடு கூட்டமாக இருந்து விடுமா என்ன? படத்தின் வலது ஓரத்தில் ஒரு புதருக்கு பின்னால், வேட்டையாடுவதற்காக புலி பதுங்கி இருக்கிறது. அதன் காட்டு நடத்தையைப் போலவே, இந்த ஒளியியல் மாயையில் உள்ள புலி, புதருக்குப் பின்னால் அமர்ந்து, அதன் இரையின் மீது பாய்வதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது. இப்போ உற்று நோக்கி பாருங்க.. புலியை நீங்கள் கண்டு பிடித்துவிடலாம்.. இந்த வித்தியாசமான விளையாட்டு தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது .
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications