சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு.. அடுத்த வாரம் விசாரணை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவின் நியமனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருக்கும் வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
டெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கும் நாகேஸ்வர ராவின் நியமனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருக்கும் வழக்கு அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
சில நாட்களுக்கு முன் சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். இதையடுத்து அலோக் வெர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி கூடி இந்த முடிவை எடுத்தது.

இதனால் முன்னாள் இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018 அக்டோபரில் அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட போதும் கூட, நாகேஷ்வர ராவ்தான் இடைக்கால இயக்குனராக செயல்பட்டார்.
இரண்டாவது முறையாக நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நாகேஸ்வர ராவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. காமன் காஸ் என்ற அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால் வழக்கை அவசர வழக்காக எடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சிபிஐ இயக்குனர் இல்லாத சமயத்தில், புதிய சட்டத்தின்படி இடைக்கால இயக்குனரை நியமிக்க முடியாது, இயக்குநரைத்தான் நியமிக்க வேண்டும். அதனால், இடைக்கால இயக்குனரின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications